• May 17 2024

இலங்கையில் எயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு! samugammedia

Chithra / Aug 29th 2023, 8:40 pm
image

Advertisement

இலங்கையில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2023 ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளமை இதுவே முதல்தடவையாகும்.

மேலும், தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கையில் 181 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு 165 நோயாளர் பதிவுகள் கண்டறிப்பட்ட நிலையில் தற்போது அது 181ஆக அதிகரித்துள்ளது.பாதிக்கபட்ட அனைவரும் 15 தொடக்கம் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனும் அதிர்ச்சி அறிக்கையும் வெளியாகியுள்ளது.

மீதமுள்ளவர்கள் 25 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2023 இல் எச்.ஐ.வி ஆய்வு அறிக்கையின் படி, ஆண் மற்றும் பெண் விகிதம் 8.1:1 ஆக உள்ளது.

பாலியல் தொடர்பிலான சரியான புரிதல் இன்மையே எயிட்ஸ் போன்ற நோய்கள் பரவுவதற்கு பிரதான காரணம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.


இலங்கையில் எயிட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு samugammedia இலங்கையில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கடந்த 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2023 ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளமை இதுவே முதல்தடவையாகும்.மேலும், தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, இலங்கையில் 181 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.கடந்த 2022ஆம் ஆண்டு 165 நோயாளர் பதிவுகள் கண்டறிப்பட்ட நிலையில் தற்போது அது 181ஆக அதிகரித்துள்ளது.பாதிக்கபட்ட அனைவரும் 15 தொடக்கம் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனும் அதிர்ச்சி அறிக்கையும் வெளியாகியுள்ளது.மீதமுள்ளவர்கள் 25 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2023 இல் எச்.ஐ.வி ஆய்வு அறிக்கையின் படி, ஆண் மற்றும் பெண் விகிதம் 8.1:1 ஆக உள்ளது.பாலியல் தொடர்பிலான சரியான புரிதல் இன்மையே எயிட்ஸ் போன்ற நோய்கள் பரவுவதற்கு பிரதான காரணம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement