• Jun 15 2024

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி - எஸ்.சந்துரு பெணாண்டோ ஆகியோருக்கிடையில் சந்திப்பு samugammedia

Chithra / Aug 29th 2023, 8:25 pm
image

Advertisement

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே  அவர்களை மரியாதையின் நிமித்தம் சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர் அதி.வண. பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெணாண்டோ இன்றைய தினம் (29)  கொழும்பில் சந்தித்து உரையாடினார்.

இதன் போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் கடந்த வருடத்தை விட  இந்த வருடம் சில முன்னேற்றங்களை காண்பதாகவும், நீங்களும் நானும் நாம் எல்லோரும் ஒரு கிறிஸ்தவ சமூகமாய் தொடர்ந்து இந்த நாட்டுக்காக பிரார்த்திக்க  வேண்டும் என பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே தெரிவித்துள்ளார்.

கடந்த மாதங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சென்றிருந்தேன். அங்கு மக்கள் அலை அலையாய் வந்து என்னிடம் கூறியது ஒன்றே ஒன்று. 

கடந்த 30 வருட யுத்தத்தில் என் மகனை இழந்தேன், என் குடும்பத்தை இழந்தேன், அவர்களை மீண்டும் பெற்றுத் தாருங்கள் என்று அவர்கள் கதறினார்கள்.

நீங்கள் கடவுளை நோக்கி பாருங்கள். கடவுள் உங்களுக்கு வெற்றியை தருவார். நானும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கின்றேன் என்று அவர்களிடம் கூறினேன்.

கிறிஸ்தவ சமூகமாய் நீங்களும் நானும் தொடர்ந்து இந்த நாட்டுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். கிறிஸ்தவ மதம் மிகவும் தெளிவாக கூறுகிறது நாட்டை ஆட்சி செய்கின்ற தலைவர்களுக்காக பிரார்த்தனை  செய்ய வேண்டும் என. கடவுள்  அவர்களுக்கு  நல்ல ஞானத்தை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம்.

நீங்கள் பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் உடன் நல்ல உறவைப் பேணி வருகின்றீர்கள். அதை நான் காண்கிறேன். 

இலங்கையை முன்னேற்ற அவர்களின் ஆலோசனையை பெற்றுக்கொண்டு நாம் எல்லோரும் சேர்ந்து இலங்கை நாட்டை கட்டி எழுப்புவோம் என்று அவர்  மேலும் கூறியதாக இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர் அதி வண பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெணாண்டோ மேலும் தெரிவித்தார். 


பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி - எஸ்.சந்துரு பெணாண்டோ ஆகியோருக்கிடையில் சந்திப்பு samugammedia பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே  அவர்களை மரியாதையின் நிமித்தம் சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர் அதி.வண. பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெணாண்டோ இன்றைய தினம் (29)  கொழும்பில் சந்தித்து உரையாடினார்.இதன் போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.இலங்கையில் கடந்த வருடத்தை விட  இந்த வருடம் சில முன்னேற்றங்களை காண்பதாகவும், நீங்களும் நானும் நாம் எல்லோரும் ஒரு கிறிஸ்தவ சமூகமாய் தொடர்ந்து இந்த நாட்டுக்காக பிரார்த்திக்க  வேண்டும் என பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே தெரிவித்துள்ளார்.கடந்த மாதங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு சென்றிருந்தேன். அங்கு மக்கள் அலை அலையாய் வந்து என்னிடம் கூறியது ஒன்றே ஒன்று. கடந்த 30 வருட யுத்தத்தில் என் மகனை இழந்தேன், என் குடும்பத்தை இழந்தேன், அவர்களை மீண்டும் பெற்றுத் தாருங்கள் என்று அவர்கள் கதறினார்கள்.நீங்கள் கடவுளை நோக்கி பாருங்கள். கடவுள் உங்களுக்கு வெற்றியை தருவார். நானும் உங்களுக்காக பிரார்த்தனை செய்கின்றேன் என்று அவர்களிடம் கூறினேன்.கிறிஸ்தவ சமூகமாய் நீங்களும் நானும் தொடர்ந்து இந்த நாட்டுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். கிறிஸ்தவ மதம் மிகவும் தெளிவாக கூறுகிறது நாட்டை ஆட்சி செய்கின்ற தலைவர்களுக்காக பிரார்த்தனை  செய்ய வேண்டும் என. கடவுள்  அவர்களுக்கு  நல்ல ஞானத்தை கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம்.நீங்கள் பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் உடன் நல்ல உறவைப் பேணி வருகின்றீர்கள். அதை நான் காண்கிறேன். இலங்கையை முன்னேற்ற அவர்களின் ஆலோசனையை பெற்றுக்கொண்டு நாம் எல்லோரும் சேர்ந்து இலங்கை நாட்டை கட்டி எழுப்புவோம் என்று அவர்  மேலும் கூறியதாக இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர் அதி வண பிதா அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெணாண்டோ மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement