• May 10 2024

முடங்கப்போகும் நுவரெலியா..! அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படும் தபால் சேவை - வெளியான அதிரடி அறிவிப்பு samugammedia

Chithra / Nov 8th 2023, 3:54 pm
image

Advertisement


தபால் துறையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை தாம் கோரியுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த வர்த்தமானி இன்று மாலை வெளியிடப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இதேவேளை நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு விற்பனை செய்வதாக அராசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த போராட்டத்தை நாளை நண்பகல் 12 மணிக்கு நடத்துவதற்கு ஒன்றிணைந்த தபால்; தொழிற்சங்க முன்னணி தீர்மானித்துள்ளது.

அத்துடன் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா நகரத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளை நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை வவுனியா தபால் அலுவலக ஊழியர்கள் 48 மணிநேர பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அலுவலக கடமைகள் உட்பட அனைத்து கடமைகளில் இருந்து மன்னார் தபால் ஊழியர்கள் விடுமுறை எடுத்து கொண்டதுடன் நாளைய தினமும் கடமைகளை மேற்கொள்ளாது தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டிருந்ததுடன் நுவரெலியா தபாலகம் விற்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்த பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முடங்கப்போகும் நுவரெலியா. அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படும் தபால் சேவை - வெளியான அதிரடி அறிவிப்பு samugammedia தபால் துறையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை தாம் கோரியுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.இந்நிலையில் குறித்த வர்த்தமானி இன்று மாலை வெளியிடப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்இதேவேளை நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு விற்பனை செய்வதாக அராசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி குறித்த போராட்டத்தை நாளை நண்பகல் 12 மணிக்கு நடத்துவதற்கு ஒன்றிணைந்த தபால்; தொழிற்சங்க முன்னணி தீர்மானித்துள்ளது.அத்துடன் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா நகரத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் நாளை நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.இதேவேளை வவுனியா தபால் அலுவலக ஊழியர்கள் 48 மணிநேர பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.அலுவலக கடமைகள் உட்பட அனைத்து கடமைகளில் இருந்து மன்னார் தபால் ஊழியர்கள் விடுமுறை எடுத்து கொண்டதுடன் நாளைய தினமும் கடமைகளை மேற்கொள்ளாது தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் கறுப்புக்கொடிகளும் கட்டப்பட்டிருந்ததுடன் நுவரெலியா தபாலகம் விற்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்த பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement