• Nov 22 2024

நுவரெலியா - தலவாக்கலை தனியார் பஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு

Chithra / Jul 1st 2024, 12:20 pm
image

 

நுவரெலியா - தலவாக்கலை பஸ் சாரதிக்கும் நுவரெலியா ஹட்டன் சொகுசு பஸ் சாரதிக்குமிடையே தனிப்பட்ட முறையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இனந்தெரியாத நபர்களால் நேற்று (30) இரவு நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் இரண்டு பஸ்களின் முன் பக்கம் உள்ள கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இன்றைய தினம் (01) நுவரெலியா - தலவாக்கலை தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கு ஆதரவாக தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபாடும் ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந் நிலையில் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

இதன்காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும்  பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா - தலவாக்கலை தனியார் பஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு  நுவரெலியா - தலவாக்கலை பஸ் சாரதிக்கும் நுவரெலியா ஹட்டன் சொகுசு பஸ் சாரதிக்குமிடையே தனிப்பட்ட முறையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.அத்துடன் இனந்தெரியாத நபர்களால் நேற்று (30) இரவு நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் சேவையில் ஈடுபடும் இரண்டு பஸ்களின் முன் பக்கம் உள்ள கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.இதன் காரணமாக இன்றைய தினம் (01) நுவரெலியா - தலவாக்கலை தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தீடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு ஆதரவாக தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் சேவையில் ஈடுபாடும் ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.இந் நிலையில் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.இதன்காரணமாக பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும்  பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement