கடந்த சில வாரங்களாக திரையுலகம் பல்வேறு பிரபலங்களின் உயிரிழப்புக்களால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது மற்றுமொரு பிரபல நடிகர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரபல இந்தி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சமீர் காகர்.
இவர் 40 இற்கும் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாது 'நக்கட்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து மேலும் பிரபலமானார்.
அதேவேளை சல்மான்கானுடன் இணைந்து 'ஜெய் ஹோ' படத்தில் சமீர் காகர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இந்த நிலையில் சமீர் காகருக்கு யாருமே எதிர்பாராத நேரத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனாலும் அவரது பல உடல் உறுப்புகள் செயல் இழந்து இருந்தது பரிசோதனை மூலம் தெரிய வந்தது.
இதனால் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி சமீர் காகர் தனது 71ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சமீர் காகரின் இழப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, இவரின் மறைவுக்கு இந்தி நடிகர் நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஓ.மை.காட்.பிரபல நடிகர் திடீர் மரணம். சோகத்தில் மூழ்கிய திரையுலகம்.SamugamMedia கடந்த சில வாரங்களாக திரையுலகம் பல்வேறு பிரபலங்களின் உயிரிழப்புக்களால் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.இந்நிலையில் தற்போது மற்றுமொரு பிரபல நடிகர் உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பிரபல இந்தி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சமீர் காகர். இவர் 40 இற்கும் அதிகமான படங்களில் நடித்து ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டு இருக்கிறார். அதுமட்டுமல்லாது 'நக்கட்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து மேலும் பிரபலமானார். அதேவேளை சல்மான்கானுடன் இணைந்து 'ஜெய் ஹோ' படத்தில் சமீர் காகர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இந்த நிலையில் சமீர் காகருக்கு யாருமே எதிர்பாராத நேரத்தில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் அவரது பல உடல் உறுப்புகள் செயல் இழந்து இருந்தது பரிசோதனை மூலம் தெரிய வந்தது. இதனால் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி சமீர் காகர் தனது 71ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் சமீர் காகரின் இழப்பு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, இவரின் மறைவுக்கு இந்தி நடிகர் நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.