• Mar 13 2025

கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Chithra / Mar 13th 2025, 2:42 pm
image

 

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ35 பிரதான வீதியில் பயணித்த கப்ரக வாகனத்தை சோதனையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர் ஐஸ் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.

சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று சோதனையிட்டபொழுதே ஐந்து கிராமம் 720 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை சிறப்பு அதிரடிப்படையினர் கைப்பற்றியதுடன் சந்தேக நபர்  பயன்படுத்திய கப்ரக வாகனமும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடையப் பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது  கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ35 பிரதான வீதியில் பயணித்த கப்ரக வாகனத்தை சோதனையிட்ட சிறப்பு அதிரடிப்படையினர் ஐஸ் போதை பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்று சோதனையிட்டபொழுதே ஐந்து கிராமம் 720 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளை சிறப்பு அதிரடிப்படையினர் கைப்பற்றியதுடன் சந்தேக நபர்  பயன்படுத்திய கப்ரக வாகனமும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடையப் பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஒப்படைத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement