• Jan 07 2025

மாத்தறை சிறைச்சாலையில் நடந்த அசம்பாவிதம் - மேலும் ஒரு கைதி உயிரிழப்பு!

Chithra / Jan 3rd 2025, 8:36 am
image

 

மாத்றை சிறைச்சாலையில் மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.

அதன்படி, இந்த சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் (01) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 12 கைதிகள் காயமடைந்த நிலையில், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒரு கைதி உயிரிழந்தார்.

கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஜி மற்றும் எஃப் விடுதிகளின் மீது அருகில் இருந்த மரத்தின் கிளை ஒன்று விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த கைதிகள் 25, 27, 32, 34, 35, 39, 41 மற்றும் 52 வயதுடைய தெனிபிட்டிய, மிரிஸ்ஸ, வெலிகம, காலி, மாத்தறை, கந்தர, படபொல, டீயெந்தர மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர்.

விபத்தின் போது, ​​ஜி மற்றும் எஃப் விடுதிகளில் சுமார் 100 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, காயமடைந்து சகிச்சைக்காக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 07 பேர் சிகிச்சை பெற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அதேநேரம், மேலும் மூன்று பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, தற்சமயம் எழுந்துள்ள இடவசதி நெருக்கடியால் மாத்தறை சிறைச்சாலையில் உள்ள 55 கைதிகளை நேற்றிரவு இரவு அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மாத்தறை சிறைச்சாலையில் நடந்த அசம்பாவிதம் - மேலும் ஒரு கைதி உயிரிழப்பு  மாத்றை சிறைச்சாலையில் மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்து வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்துள்ளார்.அதன்படி, இந்த சம்பவத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 02 ஆக அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் (01) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 12 கைதிகள் காயமடைந்த நிலையில், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒரு கைதி உயிரிழந்தார்.கைதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த ஜி மற்றும் எஃப் விடுதிகளின் மீது அருகில் இருந்த மரத்தின் கிளை ஒன்று விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.காயமடைந்த கைதிகள் 25, 27, 32, 34, 35, 39, 41 மற்றும் 52 வயதுடைய தெனிபிட்டிய, மிரிஸ்ஸ, வெலிகம, காலி, மாத்தறை, கந்தர, படபொல, டீயெந்தர மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர்.விபத்தின் போது, ​​ஜி மற்றும் எஃப் விடுதிகளில் சுமார் 100 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, காயமடைந்து சகிச்சைக்காக வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் 07 பேர் சிகிச்சை பெற்று மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.அதேநேரம், மேலும் மூன்று பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதேவேளை, தற்சமயம் எழுந்துள்ள இடவசதி நெருக்கடியால் மாத்தறை சிறைச்சாலையில் உள்ள 55 கைதிகளை நேற்றிரவு இரவு அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement