கொழும்பு -வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சார்லிமன் வீதி பகுதியில் அமைந்துள்ள பத்து மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மொரட்டுவ, மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.
உயிரிழந்தவர் ஒன்பதாவது மாடியில் சுவரில் நிறப்பூச்சு பூசிக்கொண்டிருந்தபோது கட்டிடத்திலிருந்து கீழே விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே விழுந்து ஒருவர் பலி - கொழும்பில் சம்பவம் கொழும்பு -வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சார்லிமன் வீதி பகுதியில் அமைந்துள்ள பத்து மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மொரட்டுவ, மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார்.உயிரிழந்தவர் ஒன்பதாவது மாடியில் சுவரில் நிறப்பூச்சு பூசிக்கொண்டிருந்தபோது கட்டிடத்திலிருந்து கீழே விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.