• May 03 2024

இணையம் ஊடாக கடன் வழங்கும் மோசடி - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! SamugamMedia

Chithra / Mar 7th 2023, 6:38 pm
image

Advertisement

இணையம் ஊடாக கடன் வழங்கும் மோசடிக்கு இரையாக வேண்டாம் என சட்ட ஆலோசகர் சந்தருவன் சேனாரத்ன பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.

இந்த மோசடி மூலம் நாளாந்தம் 05 கோடி ரூபா வங்கிகள் ஊடாக புழக்கத்தில் விடப்படுவதாக அறியமுடிகின்றது எனவும் அவர் கூறுகிறார்.

இந்நிறுவனத்தின் மூலம் கடன் பெற்றவர்களில் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மேலும் இரண்டு பிள்ளைகளின் தாய் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாகவும் அவர் கூறினார்.


மேலும் இவ்வாறான நிறுவனத்தில் கடன் பெறும் போது முதலில் 10,000 ரூபாய் வங்கிகள் மூலம் கொடுத்து படிப்படியாக 2 லட்சம் கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

கடன் பெறுவரின் அனைத்து தகவல்களை இந்த குழுவினரால் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. தொலைபேசியை ஊடுருவி கடன் பெற்றவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த கும்பல் பெற்றுக் கொள்கின்றது.

கடன் பணத்தை செலுத்த தாமதமானால் ஊடுருவிய போது பெற்றுக் கொள்ளப்பட்ட புகைப்படத்தை கொண்டு “இவர் திருடன்” என பதிவிட்டு அந்த நபருக்கு தொடர்புடைய நபர்களுக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பப்படுகின்றது.


நிறுவனத்திற்கு நிரந்தர முகவரி இருந்தாலும் அது போலியானது எனவும் நிறுவனத்திற்கு உரிமையாளர் இல்லை எனவும் சட்டத்தரணி சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸாரின் விசாரணைகளின் போது, ​​அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னிடம் கையெழுத்திட்டதாகவும், அதற்கு மேல் தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இந்த நிறுவனத்தில் கடன் பெற்று கடனை செலுத்துவதில் காலதாமதம் செய்வதாக பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என சட்டத்தரணி சேனாரத்ன தெரிவித்தார்.

இந்த மோசடியாளர்கள் இந்த நாட்டில் இருந்து செயற்படுகிறார்களா அல்லது வெளிநாட்டில் இருந்து செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் நிலவுவதாகவும், இது தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாக இவர்களிடம் கடன் பெறும் நபர்கள் அதிக தொகையுடன் கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

இணையம் ஊடாக கடன் வழங்கும் மோசடி - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை SamugamMedia இணையம் ஊடாக கடன் வழங்கும் மோசடிக்கு இரையாக வேண்டாம் என சட்ட ஆலோசகர் சந்தருவன் சேனாரத்ன பொதுமக்களை கேட்டுக்கொள்கிறார்.இந்த மோசடி மூலம் நாளாந்தம் 05 கோடி ரூபா வங்கிகள் ஊடாக புழக்கத்தில் விடப்படுவதாக அறியமுடிகின்றது எனவும் அவர் கூறுகிறார்.இந்நிறுவனத்தின் மூலம் கடன் பெற்றவர்களில் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், மேலும் இரண்டு பிள்ளைகளின் தாய் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும் இவ்வாறான நிறுவனத்தில் கடன் பெறும் போது முதலில் 10,000 ரூபாய் வங்கிகள் மூலம் கொடுத்து படிப்படியாக 2 லட்சம் கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.கடன் பெறுவரின் அனைத்து தகவல்களை இந்த குழுவினரால் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. தொலைபேசியை ஊடுருவி கடன் பெற்றவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த கும்பல் பெற்றுக் கொள்கின்றது.கடன் பணத்தை செலுத்த தாமதமானால் ஊடுருவிய போது பெற்றுக் கொள்ளப்பட்ட புகைப்படத்தை கொண்டு “இவர் திருடன்” என பதிவிட்டு அந்த நபருக்கு தொடர்புடைய நபர்களுக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பப்படுகின்றது.நிறுவனத்திற்கு நிரந்தர முகவரி இருந்தாலும் அது போலியானது எனவும் நிறுவனத்திற்கு உரிமையாளர் இல்லை எனவும் சட்டத்தரணி சேனாரத்ன தெரிவித்தார்.பொலிஸாரின் விசாரணைகளின் போது, ​​அந்த நிறுவனத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னிடம் கையெழுத்திட்டதாகவும், அதற்கு மேல் தனக்கு எதுவும் தெரியாது எனவும் கூறியுள்ளார்.இந்த நிறுவனத்தில் கடன் பெற்று கடனை செலுத்துவதில் காலதாமதம் செய்வதாக பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என சட்டத்தரணி சேனாரத்ன தெரிவித்தார்.இந்த மோசடியாளர்கள் இந்த நாட்டில் இருந்து செயற்படுகிறார்களா அல்லது வெளிநாட்டில் இருந்து செயற்படுகிறார்களா என்ற சந்தேகம் நிலவுவதாகவும், இது தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாக இவர்களிடம் கடன் பெறும் நபர்கள் அதிக தொகையுடன் கடனை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement