• May 19 2024

34 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!

Tamil nila / Dec 12th 2022, 8:04 pm
image

Advertisement

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சுமார் 34,000 பட்டதாரிகளுக்கு, ஓய்வுபெறவுள்ள சிரேஷ்ட அரச அதிகாரிகளின் கடமைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு வருட காலம் பயிற்சியளிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்ளக அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,


அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறவுள்ளனர்.



பெருந்தொகையான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும் போதிய அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் இருக்கின்றனர்.


எனவே அரச சேவையில் எந்த வீழ்ச்சியும் ஏற்படாது. ஏறக்குறைய 250 அரச வைத்தியர்களும் 1,200 செவிலியர்கள் 60 வயதை எட்டியதால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெறவுள்ளனர்” - என்றார்.

34 ஆயிரம் பட்டதாரிகளுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட சுமார் 34,000 பட்டதாரிகளுக்கு, ஓய்வுபெறவுள்ள சிரேஷ்ட அரச அதிகாரிகளின் கடமைகளை அறிந்து கொள்வதற்காக ஒரு வருட காலம் பயிற்சியளிக்கப்படும் என பொதுநிர்வாக, உள்ளக அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,அரச ஊழியர்கள் 60 வயதில் ஓய்வுபெற வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறவுள்ளனர்.பெருந்தொகையான அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றாலும் போதிய அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் இருக்கின்றனர்.எனவே அரச சேவையில் எந்த வீழ்ச்சியும் ஏற்படாது. ஏறக்குறைய 250 அரச வைத்தியர்களும் 1,200 செவிலியர்கள் 60 வயதை எட்டியதால் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெறவுள்ளனர்” - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement