• May 19 2024

கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவித்தல்!

Tamil nila / Dec 12th 2022, 7:59 pm
image

Advertisement

தரம் - 1 மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பது தொடர்பான புதிய விதிமுறைகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்குவது அமைச்சின் ஊடாக அல்லாமல் அந்தந்த பாடசாலைகளினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


இன்று விசேட அறிக்கை ஒன்றின் மூலம் கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.



குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர கற்கைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தாம் விண்ணப்பிக்கும் பாடப்பிரிவை கொண்டிராத பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்களின் விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். மாறாக அவற்றை கல்வி அமைச்சுக்கு அனுப்பக்கூடாது.


இடைநடுவே வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை 2022ஆம் ஆண்டின் 3ஆம் தவணை ஆரம்பமான டிசம்பர் 5ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.



2023 மார்ச் 24ஆம் திகதியன்று 2022ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை முடிவடைந்த பின்னரே பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து 2023ஆம் ஆண்டில் இடைநடுவே வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” - என்றுள்ளது.






கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட அறிவித்தல் தரம் - 1 மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களை பாடசாலைகளில் சேர்ப்பது தொடர்பான புதிய விதிமுறைகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.தரம் ஒன்றுக்கு மாணவர்களை உள்வாங்குவது அமைச்சின் ஊடாக அல்லாமல் அந்தந்த பாடசாலைகளினால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இன்று விசேட அறிக்கை ஒன்றின் மூலம் கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தர கற்கைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தாம் விண்ணப்பிக்கும் பாடப்பிரிவை கொண்டிராத பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள், தங்களின் விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். மாறாக அவற்றை கல்வி அமைச்சுக்கு அனுப்பக்கூடாது.இடைநடுவே வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை 2022ஆம் ஆண்டின் 3ஆம் தவணை ஆரம்பமான டிசம்பர் 5ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.2023 மார்ச் 24ஆம் திகதியன்று 2022ஆம் ஆண்டின் மூன்றாம் தவணை முடிவடைந்த பின்னரே பாடசாலைகளில் உள்ள வெற்றிடங்களின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை பரிசீலித்து 2023ஆம் ஆண்டில் இடைநடுவே வகுப்புகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” - என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement