திருகோணமலையின் வளங்களை பிற நாடுகளுக்கு விற்பதை உடனடியாக நிறுத்துமாறு கோரி திருமலை மாவட்ட பிரஜைகள் சங்கத்தினால் இன்றையதினம்(18) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், ஊர் மக்களை விரட்டி அடித்து இந்தியாவுக்கு விற்க வேண்டாம், துறைமுகத்தையும்,எண்ணை தாங்கி களையும் இந்தியாவிற்கு வழங்க வேண்டாம். என்ற பதாதைகளை ஏந்தியவாறு அம்மா அப்பா இதைக் கேளுங்கள் அண்ணன் தம்பி இதைக் கேளுங்கள். எங்கள் நிலம் எங்கள் வளங்கள் காத்திட முன்வருங்கள் , ஊரையே வெளியேற்றி பொருளாதார வலயம் செய்கிறார்களாம். ஊர் மக்களை விரட்டி அடித்து இந்தியாவுக்கு விற்கிறார்கள்; போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் சிவில் சமூகத்தை சேர்ந்த ஆர்வலர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
திருகோணமலையின் வளங்களை பிற நாடுகளுக்கு விற்பதற்கு எதிர்ப்பு. வீதியில் இறங்கிய மக்கள்.samugammedia திருகோணமலையின் வளங்களை பிற நாடுகளுக்கு விற்பதை உடனடியாக நிறுத்துமாறு கோரி திருமலை மாவட்ட பிரஜைகள் சங்கத்தினால் இன்றையதினம்(18) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், ஊர் மக்களை விரட்டி அடித்து இந்தியாவுக்கு விற்க வேண்டாம், துறைமுகத்தையும்,எண்ணை தாங்கி களையும் இந்தியாவிற்கு வழங்க வேண்டாம். என்ற பதாதைகளை ஏந்தியவாறு அம்மா அப்பா இதைக் கேளுங்கள் அண்ணன் தம்பி இதைக் கேளுங்கள். எங்கள் நிலம் எங்கள் வளங்கள் காத்திட முன்வருங்கள் , ஊரையே வெளியேற்றி பொருளாதார வலயம் செய்கிறார்களாம். ஊர் மக்களை விரட்டி அடித்து இந்தியாவுக்கு விற்கிறார்கள்; போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டத்தில் சிவில் சமூகத்தை சேர்ந்த ஆர்வலர்கள், மீனவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.