• May 21 2024

உள்ளுர் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட எட்டு வகையான தடுப்பூசிகளுக்கான ஆணை! samugammedia

Tamil nila / Sep 15th 2023, 9:37 am
image

Advertisement

உள்ளுர் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட 8 வகையான தடுப்பூசிகளின் பதிவை செல்லுபடியாகாத ஆணை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இருவரினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுக்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த மனு தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின், ஒக்டோபர் 2ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மயக்க மருந்து மற்றும் மூளை தொடர்பான நோய்களுக்கு சம்பந்தப்பட்ட தனியார் உள்ளூர் நிறுவனம் தயாரித்த 8 வகையான தடுப்பூசிகளுக்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த அதிகாரசபையின் விதிமுறைகளின் பிரகாரம், மருந்து ஒன்றிற்கு அங்கீகாரம் மற்றும் பதிவு செய்வதற்கு முன்னர் 06 மாதகால “கண்காணிப்புக் காலப்பகுதிக்கு” உட்படுத்தப்பட வேண்டும், ஆனால் இதற்கான அனுமதி வழங்குவதில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்படி, இந்த தடுப்பூசிகள் சந்தையில் வெளியிடப்படுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக மனுவை பரிசீலிக்க முன்கூட்டியே திகதியை வழங்குமாறு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.

உள்ளுர் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட எட்டு வகையான தடுப்பூசிகளுக்கான ஆணை samugammedia உள்ளுர் நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்ட 8 வகையான தடுப்பூசிகளின் பதிவை செல்லுபடியாகாத ஆணை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இருவரினால் சமர்ப்பிக்கப்பட்ட ரிட் மனுக்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.இதனடிப்படையில், குறித்த மனு தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின், ஒக்டோபர் 2ஆம் திகதி தாக்கல் செய்யுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மயக்க மருந்து மற்றும் மூளை தொடர்பான நோய்களுக்கு சம்பந்தப்பட்ட தனியார் உள்ளூர் நிறுவனம் தயாரித்த 8 வகையான தடுப்பூசிகளுக்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளதாக மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.அந்த அதிகாரசபையின் விதிமுறைகளின் பிரகாரம், மருந்து ஒன்றிற்கு அங்கீகாரம் மற்றும் பதிவு செய்வதற்கு முன்னர் 06 மாதகால “கண்காணிப்புக் காலப்பகுதிக்கு” உட்படுத்தப்பட வேண்டும், ஆனால் இதற்கான அனுமதி வழங்குவதில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதன்படி, இந்த தடுப்பூசிகள் சந்தையில் வெளியிடப்படுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக மனுவை பரிசீலிக்க முன்கூட்டியே திகதியை வழங்குமாறு மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement