• Apr 20 2024

சாதாரணதர பரீட்சை நாளை ஆரம்பம்: ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில்! samugammedia

Tamil nila / May 28th 2023, 10:08 pm
image

Advertisement

2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்காக முப்படையினரினதும், பொலிஸாரினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் 4, 72,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர். பாடசாலை மூலம் 3,94,450 பேர் தோற்றவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள 3,568 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சைக்காக 40 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இதேவேளை, இந்த பரீட்சைக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய,  ஆயிரத்து 777 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  நிஹால் தைல்தூவ தெரிவித்துள்ளார்.

சாதாரணதர பரீட்சை நாளை ஆரம்பம்: ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் samugammedia 2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இதற்காக முப்படையினரினதும், பொலிஸாரினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.2022 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையில் 4, 72,553 மாணவர்கள் தோற்றவுள்ளனர். பாடசாலை மூலம் 3,94,450 பேர் தோற்றவுள்ளனர்.நாடளாவிய ரீதியில் உள்ள 3,568 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பரீட்சைக்காக 40 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.இதேவேளை, இந்த பரீட்சைக்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய,  ஆயிரத்து 777 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  நிஹால் தைல்தூவ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement