• Jan 26 2025

சி.சி.ரி.வி. கண்காணிப்பில் சிக்கிய 12 ஆயிரம் போக்குவரத்து விதி மீறல்கள்!

Chithra / Jan 22nd 2025, 11:37 am
image

 

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்துப் பொலிஸாரினால் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில், 12,918 போக்குவரத்து விதி முறை மீறல்கள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பில் சிசிரிவி  கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்தனர்.

இதன்மூலம்,  போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களின் காணொளி ஆதாரங்கள் நாடளாவிய ரீதியிலுள்ள சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு அபராதம் அளிக்கப்பட்ட குற்றச் சீட்டு சாரதிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த செயல்முறையை மேம்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்வதற்கும் பிரைமா மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (பிரைவேட்) நிறுவனத்தால் நேற்று இலங்கை பொலிஸ் திணைக்களத்தின்  'போக்குவரத்து மீறல் முகாமைத்துவ மென்பொருளை' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த மென்பொருள் போக்குவரத்து விதிமீறல்களைக் கையாளும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய மென்பொருள் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக விரைவான மற்றும் துல்லியமான நடவடிக்கையை செயல்படுத்தும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சி.சி.ரி.வி. கண்காணிப்பில் சிக்கிய 12 ஆயிரம் போக்குவரத்து விதி மீறல்கள்  கொழும்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்துப் பொலிஸாரினால் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில், 12,918 போக்குவரத்து விதி முறை மீறல்கள் பதிவாகியுள்ளன.கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பில் சிசிரிவி  கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்தனர்.இதன்மூலம்,  போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களின் காணொளி ஆதாரங்கள் நாடளாவிய ரீதியிலுள்ள சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு அபராதம் அளிக்கப்பட்ட குற்றச் சீட்டு சாரதிகளுக்கு வழங்கப்படுகின்றன.இந்த செயல்முறையை மேம்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்பத்தை இணைத்துக்கொள்வதற்கும் பிரைமா மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (பிரைவேட்) நிறுவனத்தால் நேற்று இலங்கை பொலிஸ் திணைக்களத்தின்  'போக்குவரத்து மீறல் முகாமைத்துவ மென்பொருளை' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் போக்குவரத்து விதிமீறல்களைக் கையாளும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது.புதிய மென்பொருள் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக விரைவான மற்றும் துல்லியமான நடவடிக்கையை செயல்படுத்தும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement