• May 02 2024

விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்ட பொதி: அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Tamil nila / Jan 3rd 2023, 10:07 pm
image

Advertisement

மெக்சிகோவில், விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்க முயன்ற பொதியில் நான்கு மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மெக்சிகோவின் Querétaro சர்வதேச விமான நிலையத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் அனுப்பி வைக்கப்படும் பொதிகளை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டு வரும்போது அதில், 4 மனித மண்டை ஓடுகள் இருந்துள்ளது.


மேலும், மனித உடல் தொடர்பில் விமானத்தில் அனுப்புபவர்களுக்குத் தேவையான சுகாதாரப் பதிவும் பொதியில் இடம்பெறவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.


100,000 மக்கட்தொகை கொண்ட Apatzingán பகுதியில் இருந்து, வெறும் 4,000 மக்கட்தொகை கொண்ட Manning பகுதிக்கு அந்த மண்டை ஓடுகள் அனுப்பி வைக்கப்பட இருந்தது.


மெக்சிகோவின் Michoacán மாகாணம் என்பது வன்முறைக்கு பெயர்போன பகுதி என்பதுடன், அமெரிக்க மக்கள் அப்பகுதிக்கு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


2022ல் மட்டும் மெக்சிகோவில் 26,000 படுகொலைகள் பதிவாகியுள்ளது. மட்டுமின்றி, 2006ல் இருந்து சுமார் 100,000 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்ட பொதி: அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி மெக்சிகோவில், விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்க முயன்ற பொதியில் நான்கு மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவின் Querétaro சர்வதேச விமான நிலையத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் அனுப்பி வைக்கப்படும் பொதிகளை அதிகாரிகள் பரிசோதனை மேற்கொண்டு வரும்போது அதில், 4 மனித மண்டை ஓடுகள் இருந்துள்ளது.மேலும், மனித உடல் தொடர்பில் விமானத்தில் அனுப்புபவர்களுக்குத் தேவையான சுகாதாரப் பதிவும் பொதியில் இடம்பெறவில்லை என்பதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.100,000 மக்கட்தொகை கொண்ட Apatzingán பகுதியில் இருந்து, வெறும் 4,000 மக்கட்தொகை கொண்ட Manning பகுதிக்கு அந்த மண்டை ஓடுகள் அனுப்பி வைக்கப்பட இருந்தது.மெக்சிகோவின் Michoacán மாகாணம் என்பது வன்முறைக்கு பெயர்போன பகுதி என்பதுடன், அமெரிக்க மக்கள் அப்பகுதிக்கு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது.2022ல் மட்டும் மெக்சிகோவில் 26,000 படுகொலைகள் பதிவாகியுள்ளது. மட்டுமின்றி, 2006ல் இருந்து சுமார் 100,000 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement