• Nov 28 2024

வவுனியாவில் 10 ஆயிரம் ஏக்கராக குறைவடைந்த பெரும்போக நெற்செய்கை!

Tamil nila / Nov 21st 2024, 8:09 pm
image

வவுனியா மாவட்டத்தில் இம்முறை பிந்திய மழைவீழ்ச்சி காரணமாக பெரும்போக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சிநிலை ஏற்ப்பட்டுள்ளது. 

இதுவரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள 9 கமநல அபிவிருத்தி பிரிவுகளினூடாகவும் 10 ஆயிரத்து 51 ஏக்கர் காணிகளில் மாத்திரம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அவற்றில் மிககுறைவாக உலுக்குளம் பிரிவில் 30 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டுள்ளதுடன், அதிகபட்சமாக ஓமந்தை பிரிவில் 2489 ஏக்கர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இம்முறை பெரும்போகத்திற்கான மழைவீழ்ச்சி பிந்தியமையினால் இந்தநிலமை ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இனிவரும் நாட்களில் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப 25 ஆயிரத்து 216 ஏக்கர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகின்றது.

வவுனியாவில் 10 ஆயிரம் ஏக்கராக குறைவடைந்த பெரும்போக நெற்செய்கை வவுனியா மாவட்டத்தில் இம்முறை பிந்திய மழைவீழ்ச்சி காரணமாக பெரும்போக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சிநிலை ஏற்ப்பட்டுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள 9 கமநல அபிவிருத்தி பிரிவுகளினூடாகவும் 10 ஆயிரத்து 51 ஏக்கர் காணிகளில் மாத்திரம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் மிககுறைவாக உலுக்குளம் பிரிவில் 30 ஏக்கர் செய்கை பண்ணப்பட்டுள்ளதுடன், அதிகபட்சமாக ஓமந்தை பிரிவில் 2489 ஏக்கர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முறை பெரும்போகத்திற்கான மழைவீழ்ச்சி பிந்தியமையினால் இந்தநிலமை ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், இனிவரும் நாட்களில் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப 25 ஆயிரத்து 216 ஏக்கர் அளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement