• May 09 2024

கிளிநொச்சியில் நெல் வயல்கள் ஆபத்தில் - கவலையில் விவசாயிகள்

harsha / Dec 14th 2022, 12:12 pm
image

Advertisement

கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்கதிர்களில்  மடிச்சுக்கட்டி நோய்த் தாக்கம் பரவலாக அவதானிக்கப்பட்டு உள்ளது என்றும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில்:

இம்முறை பெரும்போக பயிர்ச் செய்கையை அனைத்து விவசாயிகளும் கடும் சவால்களுக்கு மத்தியில் மேற்கொண்டுள்ளோம்.உரப்  பற்றாக்குறை காரணமாக கடும் விலை கொடுத்தே இம்முறை உரத்தை கொள்வனவு செய்துள்ளோம்.

கிருமி நாசினிக்காகவும்  பெருந்தொகை பணத்தை செலவழித்து உள்ளோம் .ஆனால் பணமும் முயற்சியும் இம்முறை வீணாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

வயல்களில் இலை மடிச்சுக்கட்டி   நோயின் தாக்கம் இம்முறை பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது.

எனவே  இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு உரிய தீர்வை வழங்கி பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

கிளிநொச்சியில் நெல் வயல்கள் ஆபத்தில் - கவலையில் விவசாயிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்கதிர்களில்  மடிச்சுக்கட்டி நோய்த் தாக்கம் பரவலாக அவதானிக்கப்பட்டு உள்ளது என்றும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பில் விவசாயிகள் தெரிவிக்கையில்:இம்முறை பெரும்போக பயிர்ச் செய்கையை அனைத்து விவசாயிகளும் கடும் சவால்களுக்கு மத்தியில் மேற்கொண்டுள்ளோம்.உரப்  பற்றாக்குறை காரணமாக கடும் விலை கொடுத்தே இம்முறை உரத்தை கொள்வனவு செய்துள்ளோம்.கிருமி நாசினிக்காகவும்  பெருந்தொகை பணத்தை செலவழித்து உள்ளோம் .ஆனால் பணமும் முயற்சியும் இம்முறை வீணாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.வயல்களில் இலை மடிச்சுக்கட்டி   நோயின் தாக்கம் இம்முறை பரவலாக அவதானிக்கப்பட்டுள்ளது.எனவே  இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு உரிய தீர்வை வழங்கி பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்றனர்.

Advertisement

Advertisement

Advertisement