வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.
இம்முறை வவுனியா மாவட்டத்தில் 60,831 ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 11,490 ஏக்கர் அளவில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வருட இறுதி மற்றும் இவ்வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 2547.5 ஏக்கர் நெற்பயிர்கள் செய்கை அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் தற்போது பெரும்போக நெற் செய்கை அறுவடை இடம்பெற்று வருகின்றது.
அரபா நகர் பகுதியில் இயந்திரம் மூலமான அறுவடை தற்போது இடம்பெற்றாலும், அண்மையில் ஏற்பட்ட கனமழை, குளங்களின் வான் கதவுகள் திறப்பு காரணமாக விளைச்சல் குறைவு என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் சுமார் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,
பாரிய நஷ்டங்களை எதிர்கொள்கின்றோம். தற்போது 15000 ரூபா வரை ஏக்கருக்கு இயந்திர கூலி செலவாகிறது.
விவசாயிகளுக்கு நன்மையான விடயங்களை பெற்றுத் தர வேண்டும், அப்போது தான் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது, அரசாங்கம் எங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம் - விளைச்சல் குறைவு என விவசாயிகள் கவலை வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.இம்முறை வவுனியா மாவட்டத்தில் 60,831 ஏக்கரில் பெரும்போக நெற் செய்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 11,490 ஏக்கர் அளவில் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த வருட இறுதி மற்றும் இவ்வருட ஆரம்பத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 2547.5 ஏக்கர் நெற்பயிர்கள் செய்கை அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் தற்போது பெரும்போக நெற் செய்கை அறுவடை இடம்பெற்று வருகின்றது.அரபா நகர் பகுதியில் இயந்திரம் மூலமான அறுவடை தற்போது இடம்பெற்றாலும், அண்மையில் ஏற்பட்ட கனமழை, குளங்களின் வான் கதவுகள் திறப்பு காரணமாக விளைச்சல் குறைவு என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் சுமார் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,பாரிய நஷ்டங்களை எதிர்கொள்கின்றோம். தற்போது 15000 ரூபா வரை ஏக்கருக்கு இயந்திர கூலி செலவாகிறது. விவசாயிகளுக்கு நன்மையான விடயங்களை பெற்றுத் தர வேண்டும், அப்போது தான் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது, அரசாங்கம் எங்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.