• Apr 28 2024

பால்மாவின் விலையில் மீண்டும் மாற்றம்? வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Oct 3rd 2023, 3:53 pm
image

Advertisement

பால் மா இறக்குமதி வரி நீக்கப்படும் நிலையில் பால்மா பைக்கெற் ஒன்றினை 600 முதல் 650 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் பொதுமக்களுக்கு வழங்கமுடியும் என இறக்குமதியாளர்கள்
தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்படும் பால்மாவின் விலை சுமார் 1,100 ரூபாயாக காணப்படுகிறது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த வரி நீக்கப்படும் நிலையில் பால்மா பைக்கெற் ஒன்றினை 600 முதல் 650 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் பொதுமக்களுக்கு வழங்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு 10 வீதம் புதிய வரியை விதிப்பதற்கு வர்த்தக அமைச்சு அண்மையில் தீர்மானம் மேற்கொண்டது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் போது 225 ரூபாய் வரியாக செலுத்தப்படுகிறது.

அத்துடன், பெறுமதி சேர் வரி (வற்) 165 ரூபாய், சமூக பாதுகாப்பு வைப்புத் தொகை 55 ரூபா மற்றும் விமான சேவைகள் வரி 122 ரூபாவும் அறவிடப்படுவதுடன் இதன்படி, பால்மா கிலோ ஒன்றுக்கு மொத்தமாக 567 ரூபா வரியாக செலுத்தப்படுகிறது.

குறித்த வரிகள் நீக்கப்பட்டால் குறைந்த விலையில் பால்மா பைக்கெற்றுகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

பால்மாவின் விலையில் மீண்டும் மாற்றம் வெளியான அறிவிப்பு.samugammedia பால் மா இறக்குமதி வரி நீக்கப்படும் நிலையில் பால்மா பைக்கெற் ஒன்றினை 600 முதல் 650 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் பொதுமக்களுக்கு வழங்கமுடியும் என இறக்குமதியாளர்கள்தெரிவிக்கின்றனர்.அதேவேளை, கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டுவரப்படும் பால்மாவின் விலை சுமார் 1,100 ரூபாயாக காணப்படுகிறது என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.குறித்த வரி நீக்கப்படும் நிலையில் பால்மா பைக்கெற் ஒன்றினை 600 முதல் 650 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் பொதுமக்களுக்கு வழங்கமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு 10 வீதம் புதிய வரியை விதிப்பதற்கு வர்த்தக அமைச்சு அண்மையில் தீர்மானம் மேற்கொண்டது.இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் போது 225 ரூபாய் வரியாக செலுத்தப்படுகிறது.அத்துடன், பெறுமதி சேர் வரி (வற்) 165 ரூபாய், சமூக பாதுகாப்பு வைப்புத் தொகை 55 ரூபா மற்றும் விமான சேவைகள் வரி 122 ரூபாவும் அறவிடப்படுவதுடன் இதன்படி, பால்மா கிலோ ஒன்றுக்கு மொத்தமாக 567 ரூபா வரியாக செலுத்தப்படுகிறது.குறித்த வரிகள் நீக்கப்பட்டால் குறைந்த விலையில் பால்மா பைக்கெற்றுகளை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement