• May 10 2024

பாணின் விலை மீண்டும் குறைப்பு? - வெளியான விசேட அறிவிப்பு!SamugamMedia

Sharmi / Mar 6th 2023, 3:28 pm
image

Advertisement

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல  மடங்கு அதிகரித்துள்ளது.

அதேவேளை கடந்த சில மாதங்களாக பாண் இறாத்தல் 180- 200ரூபாவாக  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.



இவ்வாறானதொரு நிலையில், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் எனவும், அவற்றை மேலும் அதிகரிக்க எந்த தயாரிப்பும் இல்லை எனவும்,குறைந்தபட்சம் பாண் இறாத்தல் 100 ரூபாவாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.



இதற்கு அரசின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பாண் ,பணிஸ் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

பாண் விலையை நுகர்வோரால் தாங்க முடியாது எனவும் அதனால் பாண்,பனிஸ்களின் விற்பனை 20 முதல் 25 வீதம் வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.  

மின் கட்டண உயர்வால், பேக்கரி தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பேக்கரி தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.




பாணின் விலை மீண்டும் குறைப்பு - வெளியான விசேட அறிவிப்புSamugamMedia இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல  மடங்கு அதிகரித்துள்ளது.அதேவேளை கடந்த சில மாதங்களாக பாண் இறாத்தல் 180- 200ரூபாவாக  விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.இவ்வாறானதொரு நிலையில், பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் எனவும், அவற்றை மேலும் அதிகரிக்க எந்த தயாரிப்பும் இல்லை எனவும்,குறைந்தபட்சம் பாண் இறாத்தல் 100 ரூபாவாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.இதற்கு அரசின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் பாண் ,பணிஸ் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.பாண் விலையை நுகர்வோரால் தாங்க முடியாது எனவும் அதனால் பாண்,பனிஸ்களின் விற்பனை 20 முதல் 25 வீதம் வரை குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.  மின் கட்டண உயர்வால், பேக்கரி தொழிலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, பேக்கரி தொழில் நலிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement