• May 19 2024

யாழ் பழைய மாணவச்சிப்பாய் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி பாசறை!SamugamMedia

Sharmi / Mar 6th 2023, 3:51 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் பழைய மாணவச்சிப்பாய் அமைப்பினால், யாழ். வலயக்கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன், யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு Change To The Life எனும் பயிற்சி பாசறை அண்மையில் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வானது அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சி.கஜவதனன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் காலை 8.30 மணிக்கு Trimmer hall இல் ஆரம்பமான இந்  நிகழ்வில் தலைமைத்துவம், எதிர்கால வழிகாட்டல் , போதை ஒழிப்பு, மாணவர்களின் திறன் விருத்தி, இனங்களுக்கு இடையேயான சகோதரத்துவம் போன்ற பெறுமதியான விடயங்கள் சிறந்த வளவாளர்களால் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் மாணவர் தேசிய படையணியின் 20வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி Lt.Col.RHNP. ரத்னவீரவினால்  சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து சகோதர இனத்தை சேர்ந்த மாணவர்களும் பங்குபற்றி இருந்தனர்.

கல்வி சார் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட பல நலன்விரும்பிகள் தங்களது மகத்தான பங்களிப்பினை மேற்கொண்டு இருந்தனர்.



யாழ் பழைய மாணவச்சிப்பாய் அமைப்பினால் பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சி பாசறைSamugamMedia யாழ்ப்பாணம் பழைய மாணவச்சிப்பாய் அமைப்பினால், யாழ். வலயக்கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன், யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு Change To The Life எனும் பயிற்சி பாசறை அண்மையில் இடம்பெற்றது.மேற்படி நிகழ்வானது அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.சி.கஜவதனன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.சர்வமதத் தலைவர்களின் ஆசியுடன் காலை 8.30 மணிக்கு Trimmer hall இல் ஆரம்பமான இந்  நிகழ்வில் தலைமைத்துவம், எதிர்கால வழிகாட்டல் , போதை ஒழிப்பு, மாணவர்களின் திறன் விருத்தி, இனங்களுக்கு இடையேயான சகோதரத்துவம் போன்ற பெறுமதியான விடயங்கள் சிறந்த வளவாளர்களால் வழங்கப்பட்டது.கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் மாணவர் தேசிய படையணியின் 20வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி Lt.Col.RHNP. ரத்னவீரவினால்  சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து சகோதர இனத்தை சேர்ந்த மாணவர்களும் பங்குபற்றி இருந்தனர்.கல்வி சார் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட பல நலன்விரும்பிகள் தங்களது மகத்தான பங்களிப்பினை மேற்கொண்டு இருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement