• Sep 17 2024

பண்டிதரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் வல்வெட்டித்துறையில் அனுஸ்டிப்பு!

Sharmi / Jan 9th 2023, 2:52 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறைப் பகுதியில், விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது இல்லத்தில் இன்று திங்கட்கிழமை(09) அனுஷ்டிக்கப்பட்டது.

பண்டிதரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், மற்றும் குடும்பத்தாரும் இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அச்சுவேலியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமை படையினர் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட சமரில் கப்டன் பண்டிதர் உட்பட பல போராளிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.



பண்டிதரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் வல்வெட்டித்துறையில் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறைப் பகுதியில், விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது இல்லத்தில் இன்று திங்கட்கிழமை(09) அனுஷ்டிக்கப்பட்டது.பண்டிதரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், மற்றும் குடும்பத்தாரும் இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி அச்சுவேலியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமை படையினர் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட சமரில் கப்டன் பண்டிதர் உட்பட பல போராளிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement