• Oct 27 2024

மாணவர்களிடம் வாட்ஸ்அப் குறூப் மூலம் நிதி சேகரிப்பு - அதிபரும் உடந்தை பெற்றோர் குற்றச்சாட்டு..!!

Tamil nila / Apr 8th 2024, 9:12 pm
image

Advertisement

யாழ் வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு என வாட்ஸ் அப் குறூப் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது  

குறித்த பாடசாலையின் அதிபரின் தூண்டுதலின் பேரில் ஒவ்வொரு வகுப்பாக வாட்ஸ்அப் குறூப் உருவாக்கப்பட்டு திட்டங்களுக்கு ஏற்ற வகையில் மாணவர்களிடம் பணம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

குறித்த வாட்ஸ் அப் குழுவில் பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர்  பிரதான ஏற்பாட்டாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த செயற்பாட்டுக்கு பல பெற்றோர் விருப்பம் இல்லாத நிலையிலும் மாணவர்கள் பழி வாங்கப்படுவார்கள் என்ற காரணத்தினால் குறித்த  வாட்ஆப் குழுவில் தாமும் பணத்தை பதிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறித்த குழுவில்  குடும்ப நிலைமை காரணமாக பணம் செலுத்த பின்னிக்கும் மாணவர்களை பெயர் குறிப்பிட்டு விரைவாக பணத்தை பதிவு செய்யுங்கள். என  குழுவில் எழுதுவது தமக்கு உளநீதியான தாக்கத்தை ஏற்படுவதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் கலந்துள்ளது.

தமக்கு குறித்த குழுவில் பண விபரத்தை பதிவிட விருப்பம் இல்லாத நிலையிலும் அவர்கள் கேட்கும்போது தம்மால்  பிள்ளையின் நலம் கருதி  பணம் வழங்க முடியாது எனப் பதிலளிக்க திடசங்கமான நிலை ஏற்பட்டுள்ளதாக சில  பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்

நாட்டில் இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களிடம் பாடசாலை அபிவிருத்திக் என நிதி கேட்பது முறையற்ற செயற்பாடாக காணப்படுகின்ற நிலையில் உரிய தரப்பினர்கள் நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன் வக்கப்படுகிறது.



மாணவர்களிடம் வாட்ஸ்அப் குறூப் மூலம் நிதி சேகரிப்பு - அதிபரும் உடந்தை பெற்றோர் குற்றச்சாட்டு. யாழ் வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு என வாட்ஸ் அப் குறூப் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது  குறித்த பாடசாலையின் அதிபரின் தூண்டுதலின் பேரில் ஒவ்வொரு வகுப்பாக வாட்ஸ்அப் குறூப் உருவாக்கப்பட்டு திட்டங்களுக்கு ஏற்ற வகையில் மாணவர்களிடம் பணம் சேகரிக்கப்பட்டு வருகிறது.குறித்த வாட்ஸ் அப் குழுவில் பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர்  பிரதான ஏற்பாட்டாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த செயற்பாட்டுக்கு பல பெற்றோர் விருப்பம் இல்லாத நிலையிலும் மாணவர்கள் பழி வாங்கப்படுவார்கள் என்ற காரணத்தினால் குறித்த  வாட்ஆப் குழுவில் தாமும் பணத்தை பதிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.குறித்த குழுவில்  குடும்ப நிலைமை காரணமாக பணம் செலுத்த பின்னிக்கும் மாணவர்களை பெயர் குறிப்பிட்டு விரைவாக பணத்தை பதிவு செய்யுங்கள். என  குழுவில் எழுதுவது தமக்கு உளநீதியான தாக்கத்தை ஏற்படுவதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் கலந்துள்ளது.தமக்கு குறித்த குழுவில் பண விபரத்தை பதிவிட விருப்பம் இல்லாத நிலையிலும் அவர்கள் கேட்கும்போது தம்மால்  பிள்ளையின் நலம் கருதி  பணம் வழங்க முடியாது எனப் பதிலளிக்க திடசங்கமான நிலை ஏற்பட்டுள்ளதாக சில  பெற்றோர்கள் கவலை தெரிவித்தனர்நாட்டில் இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களிடம் பாடசாலை அபிவிருத்திக் என நிதி கேட்பது முறையற்ற செயற்பாடாக காணப்படுகின்ற நிலையில் உரிய தரப்பினர்கள் நேர்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன் வக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement