• Jun 02 2024

நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு..!!

Tamil nila / Apr 8th 2024, 8:46 pm
image

Advertisement

நாடளாவிய ரீதியில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 695 எச்.ஐ.வி புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்ட பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான தெரிவித்துள்ளார்.

எச்.ஐ.வி அதிகரிப்பு தொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர்,

கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 விகிதம் அதிகரித்துள்ளது.  இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.

கொழும்பு மாவட்டத்தை பொறுத்தவரை பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ், செயற்படும் சிகிச்சை நிலையங்களில் பதிவாகும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 40 விகித அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக இளம் பருவத்தினரிடையே பாலியல் நோய் தொடர்பில் போதியளவிலான புரிந்துணர்வு இல்லாமை இதற்கு பிரதான காரணமாக உள்ளது.

இது தொடர்பாக இளம் வயதினர் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே தெளிவான விழிப்புணர்வு ஏற்படத்தப்படவேண்டும்.

சில வேளைகளில் தனக்கு பாலியல் நோய் தொற்றுள்ளதா? என்பதை கண்டறிய தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்தித்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வலையமைப்பை பயன்படுத்தி சுய பரிசோதனையை செய்து கொள்வதோடு தேவையான உபகரணங்களையும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு. நாடளாவிய ரீதியில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 695 எச்.ஐ.வி புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்ட பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான தெரிவித்துள்ளார்.எச்.ஐ.வி அதிகரிப்பு தொடர்பாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர்,கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை 14 விகிதம் அதிகரித்துள்ளது.  இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.கொழும்பு மாவட்டத்தை பொறுத்தவரை பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ், செயற்படும் சிகிச்சை நிலையங்களில் பதிவாகும் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 40 விகித அதிகரிப்பை காணக்கூடியதாக உள்ளது.குறிப்பாக இளம் பருவத்தினரிடையே பாலியல் நோய் தொடர்பில் போதியளவிலான புரிந்துணர்வு இல்லாமை இதற்கு பிரதான காரணமாக உள்ளது.இது தொடர்பாக இளம் வயதினர் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே தெளிவான விழிப்புணர்வு ஏற்படத்தப்படவேண்டும்.சில வேளைகளில் தனக்கு பாலியல் நோய் தொற்றுள்ளதா என்பதை கண்டறிய தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்தித்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வலையமைப்பை பயன்படுத்தி சுய பரிசோதனையை செய்து கொள்வதோடு தேவையான உபகரணங்களையும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement