• May 21 2024

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம்: திகதி அறிவிப்பு! samugammedia

Tamil nila / Apr 16th 2023, 11:08 pm
image

Advertisement

புத்தாண்டுக்கு பின்னர் நாடாளுமன்றம் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூட இருக்கிறது. அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள அறிக்கை தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும், 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிப்பதற்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற இருக்கிறது. 

அன்றைய தினம் காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற இருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம்: திகதி அறிவிப்பு samugammedia புத்தாண்டுக்கு பின்னர் நாடாளுமன்றம் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூட இருக்கிறது. அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள அறிக்கை தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.என்றாலும், 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தீர்மானிப்பதற்கு நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பான அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற இருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement