• Jan 22 2025

நெடுந்தீவு கடலில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்; நடந்தது என்ன?

Sharmi / Jan 1st 2025, 3:27 pm
image

நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகொன்று கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நெடுந்தீவில் இருந்து இன்று பகல் 11:30 மணிக்கு குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபட்ட  பயணிகள் படகொன்று  கடலில் பயணித்த வேளை திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு இயங்க மறுத்தது.

இதன்போது குறித்த படகில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தென்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என சுமார் 60 பேருக்கும் அதிகமானோர் பயணித்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த படகானது கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் கடலில் தத்தளித்த நிலையில், இதனை அவதானித்த நெடுந்தீவு மக்கள் தமது சிறிய மீன்பிடி படகுகளை கொண்டு சென்று பயணிகளை ஆபத்திலிருந்து விரைந்து மீட்டதுடன் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் படகின் உதவியுடன் குறித்த பயணிகள் படகானது கரைக்கு கொண்டுவரப்பட்டது.

அதேவேளை, குறித்த பகுதிக்கு நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் ஊழியர்களும் விரைந்து சென்று நிலைமைகளை அவதானித்தனர்.

இச் சம்பவத்தால் படகில் பயணித்த மக்கள் பதற்றமான நிலையினை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


நெடுந்தீவு கடலில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்; நடந்தது என்ன நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபடும் பயணிகள் படகொன்று கடலில் இயந்திர கோளாறு ஏற்பட்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நெடுந்தீவில் இருந்து இன்று பகல் 11:30 மணிக்கு குறிகாட்டுவான் நோக்கி சேவையில் ஈடுபட்ட  பயணிகள் படகொன்று  கடலில் பயணித்த வேளை திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு இயங்க மறுத்தது.இதன்போது குறித்த படகில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், தென்பகுதி மக்கள் மற்றும் உள்ளூர் மக்கள் என சுமார் 60 பேருக்கும் அதிகமானோர் பயணித்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த படகானது கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் கடலில் தத்தளித்த நிலையில், இதனை அவதானித்த நெடுந்தீவு மக்கள் தமது சிறிய மீன்பிடி படகுகளை கொண்டு சென்று பயணிகளை ஆபத்திலிருந்து விரைந்து மீட்டதுடன் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் படகின் உதவியுடன் குறித்த பயணிகள் படகானது கரைக்கு கொண்டுவரப்பட்டது.அதேவேளை, குறித்த பகுதிக்கு நெடுந்தீவு பிரதேச செயலாளர் மற்றும் ஊழியர்களும் விரைந்து சென்று நிலைமைகளை அவதானித்தனர்.இச் சம்பவத்தால் படகில் பயணித்த மக்கள் பதற்றமான நிலையினை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement