• May 22 2024

ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் - பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்! samugammedia

Chithra / Jul 16th 2023, 3:15 pm
image

Advertisement

நாடு முழுவதிலும் உள்ள 51 பிரதேச செயலகங்களில் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு 29,578 பேர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 24,285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், ஒரு நாள் சேவையின் மூலம் 5,294 பேர் சமர்ப்பித்துள்ளதாகவும், பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பிரதேச செயலகங்களினால் ஒன்லைன் முறையின் ஊடாக வழங்கும் வேலைத்திட்டம் கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காணப்பட்ட நிலையும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


 

ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் - பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia நாடு முழுவதிலும் உள்ள 51 பிரதேச செயலகங்களில் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு 29,578 பேர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.அவர்களில் 24,285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், ஒரு நாள் சேவையின் மூலம் 5,294 பேர் சமர்ப்பித்துள்ளதாகவும், பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பிரதேச செயலகங்களினால் ஒன்லைன் முறையின் ஊடாக வழங்கும் வேலைத்திட்டம் கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டது.இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் பத்தரமுல்ல குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக நீண்ட வரிசையில் காணப்பட்ட நிலையும் முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement