• Apr 14 2025

கடவுச்சீட்டு விநியோகத்தில் நடைபெறும் மோசடி - மீண்டும் நீண்ட வரிசை

Chithra / Jan 28th 2025, 7:33 am
image

 

கடந்த காலங்களில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு இருந்த நீண்ட வரிசைகள் தற்போது மீண்டும் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகங்களுக்கு முன்பாக முன்னர் இருந்த நீண்ட வரிசை, இப்போது அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகங்களுக்கு அருகில் வீதிகளில் இரவு முதல் வரிசையில் காத்திருப்பவர்கள், காலை 6 மணியளவில் வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக தெரியவந்துள்ளது.

20000 ரூபாவுக்கு மேல் பணம் செலுத்தி இரவு முழுவதும் வீதியில் வரிசையில் நிற்பதுடன் பலர் வீதிகளில் உறங்குவதாக தெரியவந்துள்ளது.

காலையில் இந்த வரிசை வெளியே தெரியாமல் இருக்கும் வகையில் வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதால் வரிசைகள் வெளியே தெரியாமல் மறைந்து விடுவதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், இரவு முதல் இந்த வரிசையில் காத்திருக்கும் மக்கள், வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கு அதிக அளவு பணம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பணம் உள்ளவர்கள் வேறு வகையில் கவனிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒன்லைனில் 7 மாதங்களுக்கு முன்னர் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்த போதிலும் இன்னமும் அதனை பெற்றுக்கொள்ள முடியவில்லை என வரிசையில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடவுச்சீட்டு விநியோகத்தில் நடைபெறும் மோசடி - மீண்டும் நீண்ட வரிசை  கடந்த காலங்களில் கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு இருந்த நீண்ட வரிசைகள் தற்போது மீண்டும் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகங்களுக்கு முன்பாக முன்னர் இருந்த நீண்ட வரிசை, இப்போது அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகங்களுக்கு அருகில் வீதிகளில் இரவு முதல் வரிசையில் காத்திருப்பவர்கள், காலை 6 மணியளவில் வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாக தெரியவந்துள்ளது.20000 ரூபாவுக்கு மேல் பணம் செலுத்தி இரவு முழுவதும் வீதியில் வரிசையில் நிற்பதுடன் பலர் வீதிகளில் உறங்குவதாக தெரியவந்துள்ளது.காலையில் இந்த வரிசை வெளியே தெரியாமல் இருக்கும் வகையில் வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதால் வரிசைகள் வெளியே தெரியாமல் மறைந்து விடுவதாக தெரியவந்துள்ளது.இதற்கிடையில், இரவு முதல் இந்த வரிசையில் காத்திருக்கும் மக்கள், வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கு அதிக அளவு பணம் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பணம் உள்ளவர்கள் வேறு வகையில் கவனிக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும் ஒன்லைனில் 7 மாதங்களுக்கு முன்னர் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்த போதிலும் இன்னமும் அதனை பெற்றுக்கொள்ள முடியவில்லை என வரிசையில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement