• May 03 2024

சீனாவில் கொத்துக்கொத்தாக மடியும் மக்கள்: வெளியான அதிர்ச்சித் தகவல்!

Sharmi / Jan 23rd 2023, 12:31 pm
image

Advertisement

சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் சீனாவிலுள்ள மருத்துவமனைகள் கொரோனா தொற்றாளர்களால் நிறைந்துள்ளதுடன் ஏனைய நோயாளிகளுக்கு வீதிகளில் வைத்து வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுவரும் அவல நிலை நிலவி வருகின்றது.

இதேவேளை கொரோனா உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக ஒரு வாரத்தில் மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அதிகாரி, கடந்த ஜனவரி 13 மற்றும் 19 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சீனாவில் 13,000க்கும் அதிகமாக கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது. முன்னதாக கடந்த ஜன.12ஆம் தேதி வரை மட்டும் மருத்துவமனைகளில் சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வெளியிட்ட தகவல்படி, கடந்த ஜன. 13 முதல் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது நிமிடத்திற்கு 1.2 கொரோனா உயிரிழப்புகள் இந்த காலகட்டத்தில் பதிவாகியுள்ளது.



பொதுமக்களில் 80% பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் இதனால் நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அந்நாட்டின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யூ கூறினார் தெரிவித்துள்ளார்.     



சீனாவில் கொத்துக்கொத்தாக மடியும் மக்கள்: வெளியான அதிர்ச்சித் தகவல் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகின்றது.இந்நிலையில் சீனாவிலுள்ள மருத்துவமனைகள் கொரோனா தொற்றாளர்களால் நிறைந்துள்ளதுடன் ஏனைய நோயாளிகளுக்கு வீதிகளில் வைத்து வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கபட்டுவரும் அவல நிலை நிலவி வருகின்றது.இதேவேளை கொரோனா உயிரிழப்புக்களும் நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்து வருகின்றன.குறிப்பாக ஒரு வாரத்தில் மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அதிகாரி, கடந்த ஜனவரி 13 மற்றும் 19 வரையிலான காலகட்டத்தில் மட்டும் சீனாவில் 13,000க்கும் அதிகமாக கொரோனா தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது. முன்னதாக கடந்த ஜன.12ஆம் தேதி வரை மட்டும் மருத்துவமனைகளில் சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து வெளியிட்ட தகவல்படி, கடந்த ஜன. 13 முதல் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது நிமிடத்திற்கு 1.2 கொரோனா உயிரிழப்புகள் இந்த காலகட்டத்தில் பதிவாகியுள்ளது.பொதுமக்களில் 80% பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகவும் இதனால் நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அந்நாட்டின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யூ கூறினார் தெரிவித்துள்ளார்.     

Advertisement

Advertisement

Advertisement