• May 18 2024

முல்லைத்தீவில் இராணுவத்தினரின் செயலால் ஆத்திரமடைந்த மக்கள்...!samugammedia

Sharmi / Nov 13th 2023, 11:39 am
image

Advertisement

முல்லைத்தீவில் இராணுவத்தினரின் செயற்பாட்டால் கேப்பாப்பிலவு கிராம மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில்  முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள    முத்துமாரி அம்மன் ஆலயமும் மழையினால்  பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆலய தேவை கருதி ஆலய நிர்வாகத்தினரின்  உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் தடிகள் வெட்டப்பட்டு ஆலயத்திற்கு ஏற்றி செல்லப்பட்ட போது கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள 59 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த இராணுவத்தினர் பிடித்து பொலிஸாரிடம் தீபாவளி நாளான நேற்றையதினம்  ஒப்படைத்துள்ளனர்.

தீய செயல்களுக்கு மட்டுமே இராணுவத்தினர் துணை  போவதாகவும்,  மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் குறித்த இராணுவத்தினர் செயற்படுவதாகவும்  கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் இராணுவத்தினரின் செயலால் ஆத்திரமடைந்த மக்கள்.samugammedia முல்லைத்தீவில் இராணுவத்தினரின் செயற்பாட்டால் கேப்பாப்பிலவு கிராம மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுதற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில்  முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள    முத்துமாரி அம்மன் ஆலயமும் மழையினால்  பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலய தேவை கருதி ஆலய நிர்வாகத்தினரின்  உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்துடன் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் தடிகள் வெட்டப்பட்டு ஆலயத்திற்கு ஏற்றி செல்லப்பட்ட போது கேப்பாப்பிலவு பகுதியில் அமைந்துள்ள 59 ஆவது படைப்பிரிவினை சேர்ந்த இராணுவத்தினர் பிடித்து பொலிஸாரிடம் தீபாவளி நாளான நேற்றையதினம்  ஒப்படைத்துள்ளனர்.தீய செயல்களுக்கு மட்டுமே இராணுவத்தினர் துணை  போவதாகவும்,  மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் குறித்த இராணுவத்தினர் செயற்படுவதாகவும்  கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement