குடும்ப ஆட்சியையோ, பரம்பரை ஆட்சியையோ மீண்டும் தோற்றுவிக்காமல் மக்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்று நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் துயரங்களையும், நெருக்கடிகளையுமே அனுபவித்து வருகின்றனர்.
தவறான ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைத்ததன் காரணமாகவே அனைத்து மக்களும் அந்த பாவத்தை அனுபவிக்க வேண்டியேற்பட்டது.
2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாகும். அடுத்த வருடம் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும். அதனைக் காலம் தாழ்த்தவோ, மாற்றவோ எவருக்கும் அதிகாரம் இல்லை.
மக்களுக்கு புதிய எதிர்பார்ப்புக்களை எதிர்பார்க்கக் கூடிய ஆண்டாக 2024 அமையும்.
மீண்டும் வர்த்தகர்களிடம் நாட்டைக் கையளிப்பதோ, குடும்ப ஆட்சியை மேற்கொள்பவர்களை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதோ, பரம்பரையிலுள்ளவர்களை தெரிவு செய்வதோ நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும்.
எனவே மக்கள் அறிவுடன் சிந்தித்து தீர்மானத்தை எடுக்க வேண்டும். மக்களால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் நாம் ஏற்றுக் கொள்வோம். என தெரிவித்துள்ளார்.
மீண்டும் குடும்ப ஆட்சியையோ, பரம்பரை ஆட்சியையோ மக்கள் ஏற்படுத்தி விடக்கூடாது - நீதி அமைச்சர் தெரிவிப்பு குடும்ப ஆட்சியையோ, பரம்பரை ஆட்சியையோ மீண்டும் தோற்றுவிக்காமல் மக்கள் தமது பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்று நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் துயரங்களையும், நெருக்கடிகளையுமே அனுபவித்து வருகின்றனர். தவறான ஆட்சியாளர்களிடம் நாட்டை ஒப்படைத்ததன் காரணமாகவே அனைத்து மக்களும் அந்த பாவத்தை அனுபவிக்க வேண்டியேற்பட்டது. 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஆண்டாகும். அடுத்த வருடம் நிச்சயம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும். அதனைக் காலம் தாழ்த்தவோ, மாற்றவோ எவருக்கும் அதிகாரம் இல்லை.மக்களுக்கு புதிய எதிர்பார்ப்புக்களை எதிர்பார்க்கக் கூடிய ஆண்டாக 2024 அமையும். மீண்டும் வர்த்தகர்களிடம் நாட்டைக் கையளிப்பதோ, குடும்ப ஆட்சியை மேற்கொள்பவர்களை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதோ, பரம்பரையிலுள்ளவர்களை தெரிவு செய்வதோ நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கும். எனவே மக்கள் அறிவுடன் சிந்தித்து தீர்மானத்தை எடுக்க வேண்டும். மக்களால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்தையும் நாம் ஏற்றுக் கொள்வோம். என தெரிவித்துள்ளார்.