• Oct 26 2024

ஹொரவ்பொத்தான -கரடிக்குளம் வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை..!samugammedia

Sharmi / May 28th 2023, 11:37 am
image

Advertisement

அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரடிக்குளம் செல்லும் வீதி பல வருடங்களாக புணரமைப்பு செய்யப்படவில்லையென அப்பகுதியிலுள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஹொரவ்பொத்தான நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம்.

விவசாயம் மற்றும் சேனைப்பயிர்ச்செய்கை போன்றவற்றை பிரதான தொழிலாக கொண்டுள்ள இவர்களுக்கு அவசரமாக ஏதும் நோய்வாய்ப்பட்டால் இந்த வீதியினூடாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குன்றும் குழியுமாக இந்த வீதி காணப்படுவதுடன் வீதியால் அவசரமாக நோயாளர்களை அழைத்துச் செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் கர்ப்பிணி தாய்மார்களும் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் 

தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் அக்கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆகவே அரசியல்வாதிகள் அரச  அதிகாரிகள் இந்த மக்களின் நலன் கருதி ஹொரவ்பொத்தான -கரடிக்குளம் பிரதான வீதியை புனரமைப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



ஹொரவ்பொத்தான -கரடிக்குளம் வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை.samugammedia அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரடிக்குளம் செல்லும் வீதி பல வருடங்களாக புணரமைப்பு செய்யப்படவில்லையென அப்பகுதியிலுள்ள மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.ஹொரவ்பொத்தான நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம்.விவசாயம் மற்றும் சேனைப்பயிர்ச்செய்கை போன்றவற்றை பிரதான தொழிலாக கொண்டுள்ள இவர்களுக்கு அவசரமாக ஏதும் நோய்வாய்ப்பட்டால் இந்த வீதியினூடாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.குன்றும் குழியுமாக இந்த வீதி காணப்படுவதுடன் வீதியால் அவசரமாக நோயாளர்களை அழைத்துச் செல்ல கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் கர்ப்பிணி தாய்மார்களும் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகள் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் அக்கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.ஆகவே அரசியல்வாதிகள் அரச  அதிகாரிகள் இந்த மக்களின் நலன் கருதி ஹொரவ்பொத்தான -கரடிக்குளம் பிரதான வீதியை புனரமைப்பு செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement