• Nov 22 2024

அமெரிக்க பல்கலைக்கழகதில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிரந்தர குடியுரிமை - டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு...!

Anaath / Jun 22nd 2024, 12:13 pm
image

 தான் மீண்டும் ஆட்சியமைத்தால் அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவா்களுக்கு நிரந்தரக் குடியேற்ற உரிமம் (கிரீன் காா்டு) தானாகவே கிடைக்கும் முறையைக் கொண்டுவரப் போவதாக அந்த நாட்டு முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா்.

இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களை அமெரிக்காவில் தங்க அனுமதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போட்காஸ்ட் ஒன்றில், டிரம்ப் தனது அரசாங்கம் அமைக்கப்பட்டதும், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து திறமையானவர்களை பணியமர்த்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவுவதாக அவர் உறுதியளித்தாரா என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த டிரம்ப்., "நான் இதை செய்ய விரும்புகிறேன், செய்வேன். அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு உடனடியாக கிரீன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இதன் மூலம் அவர்கள் அமெரிக்காவில் வாழவும், இங்குள்ள வளர்ச்சிக்கு உதவவும் முடியும்" என்று கூறினார்.




அமெரிக்க பல்கலைக்கழகதில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிரந்தர குடியுரிமை - டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு.  தான் மீண்டும் ஆட்சியமைத்தால் அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் வெளிநாட்டு மாணவா்களுக்கு நிரந்தரக் குடியேற்ற உரிமம் (கிரீன் காா்டு) தானாகவே கிடைக்கும் முறையைக் கொண்டுவரப் போவதாக அந்த நாட்டு முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளாா்.இந்த நடவடிக்கை இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களை அமெரிக்காவில் தங்க அனுமதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.போட்காஸ்ட் ஒன்றில், டிரம்ப் தனது அரசாங்கம் அமைக்கப்பட்டதும், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து திறமையானவர்களை பணியமர்த்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவுவதாக அவர் உறுதியளித்தாரா என்று கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்த டிரம்ப்., "நான் இதை செய்ய விரும்புகிறேன், செய்வேன். அமெரிக்க கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு உடனடியாக கிரீன் கார்டு வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். இதன் மூலம் அவர்கள் அமெரிக்காவில் வாழவும், இங்குள்ள வளர்ச்சிக்கு உதவவும் முடியும்" என்று கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement