• Sep 21 2024

நாட்டை மீட்கவே தனிநபர் வரி! - அரசு விளக்கம்

Tax
Chithra / Feb 7th 2023, 6:09 pm
image

Advertisement

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான ஒரு உக்தியாகவே தனி நபர் வரியினை அறிமுகப்படுத்தியதாக நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான ஒரு குறுகிய கால உத்தியாகவே தனிநபர் வருமானம் அடிப்படையில் வரி விதிப்பு செய்யப்படுவதாகவும் இந்த புதிய வரி விதிப்பு முறை ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சதவீதமென்றும் நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டுகின்றார்.


புதிய வரி அறவிடும் முறை தொடர்பில் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கருத்துகள் மற்றும் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு, சில நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான குறுகிய கால உத்திகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கபில சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டை மீட்கவே தனிநபர் வரி - அரசு விளக்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான ஒரு உக்தியாகவே தனி நபர் வரியினை அறிமுகப்படுத்தியதாக நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கபில சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான ஒரு குறுகிய கால உத்தியாகவே தனிநபர் வருமானம் அடிப்படையில் வரி விதிப்பு செய்யப்படுவதாகவும் இந்த புதிய வரி விதிப்பு முறை ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சதவீதமென்றும் நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் சுட்டிக்காட்டுகின்றார்.புதிய வரி அறவிடும் முறை தொடர்பில் தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகளின் கருத்துகள் மற்றும் யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு, சில நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான குறுகிய கால உத்திகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கபில சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement