• Nov 25 2024

தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் திட்டம்? வெளியான அறிவிப்பு

Chithra / Sep 13th 2024, 9:22 am
image

 

எதிர்வரும் 21-ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் திட்டம் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி விரும்பினால் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைபடுத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தேர்தல்களின் பின்னர் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

17.1 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். சுமார் ஒரு மில்லியன் பேர் புதிதாக இம்முறை வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் திட்டம் வெளியான அறிவிப்பு  எதிர்வரும் 21-ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் திட்டம் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.இதேவேளை ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தும் அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுவதாகவும் ஜனாதிபதி விரும்பினால் ஊரடங்கு சட்டத்தை நடைமுறைபடுத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் தேர்தல்களின் பின்னர் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.17.1 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். சுமார் ஒரு மில்லியன் பேர் புதிதாக இம்முறை வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement