• Sep 17 2024

அரச அதிகாரிகளுக்கு எரிபொருள் கொடுப்பனவை மட்டுப்படுத்த திட்டம்! - வெளியான அறிவிப்பு

Chithra / Feb 4th 2023, 9:14 am
image

Advertisement

தற்போதைய சூழ்நிலையில், அரச அதிகாரிகளின் எரிபொருள் கொடுப்பனவை கொள்வனவு செய்யக்கூடிய லீற்றர் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அனைத்து சேவைகளின் முதல் தர அதிகாரிகளுக்கு அதிகபட்சம் 225 லிட்டர் மற்றும் குறைந்தபட்சம் 115 லிட்டர்களுக்கு உட்பட்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

ஆனால் QR குறியீட்டின் படி இந்த அதிகாரிகள் ஒவ்வொருவரும் பெறக்கூடிய அதிகபட்ச எரிபொருளின் அளவு மாதம் 80 லிட்டர் மட்டுமே.

அதன்படி, அதிகபட்சமாக 225 லீட்டர் எரிபொருளைப் பெறும் அதிகாரி எரிபொருளைப் பயன்படுத்தாமலேயே 145 லீட்டருக்கான கொடுப்பனவை பெறுவதாக தெரியவந்துள்ளது.


115 லிட்டர் குறைந்தபட்ச எரிபொருள் கொடுப்பனவை பெறும் அதிகாரியும் எரிபொருளைப் பயன்படுத்தாமல் கொடுப்பனவை 35 லீட்டருக்கு இணையான தொகையைப் பெறுவார்.

இதில் தொடர்பில் கருத்து வெளியிட்ட அரச உயர் அதிகாரி, இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தினால் பெருமளவு பணத்தை மீதப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச லீட்டர் அளவைக் கருத்தில் கொண்டால், ஏறத்தாழ ஒரு அதிகாரி 100 லீட்டர் தொடர்பான பணத்தைப் பெறுகிறார் என்று கருதினால், ஒரு வருடத்திற்கு அரசாங்கம் செலவழிக்க வேண்டிய தொகை 4800 கோடி ரூபாய் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அரச அதிகாரிகளுக்கு எரிபொருள் கொடுப்பனவை மட்டுப்படுத்த திட்டம் - வெளியான அறிவிப்பு தற்போதைய சூழ்நிலையில், அரச அதிகாரிகளின் எரிபொருள் கொடுப்பனவை கொள்வனவு செய்யக்கூடிய லீற்றர் எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.அனைத்து சேவைகளின் முதல் தர அதிகாரிகளுக்கு அதிகபட்சம் 225 லிட்டர் மற்றும் குறைந்தபட்சம் 115 லிட்டர்களுக்கு உட்பட்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படுகிறது.ஆனால் QR குறியீட்டின் படி இந்த அதிகாரிகள் ஒவ்வொருவரும் பெறக்கூடிய அதிகபட்ச எரிபொருளின் அளவு மாதம் 80 லிட்டர் மட்டுமே.அதன்படி, அதிகபட்சமாக 225 லீட்டர் எரிபொருளைப் பெறும் அதிகாரி எரிபொருளைப் பயன்படுத்தாமலேயே 145 லீட்டருக்கான கொடுப்பனவை பெறுவதாக தெரியவந்துள்ளது.115 லிட்டர் குறைந்தபட்ச எரிபொருள் கொடுப்பனவை பெறும் அதிகாரியும் எரிபொருளைப் பயன்படுத்தாமல் கொடுப்பனவை 35 லீட்டருக்கு இணையான தொகையைப் பெறுவார்.இதில் தொடர்பில் கருத்து வெளியிட்ட அரச உயர் அதிகாரி, இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தினால் பெருமளவு பணத்தை மீதப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச லீட்டர் அளவைக் கருத்தில் கொண்டால், ஏறத்தாழ ஒரு அதிகாரி 100 லீட்டர் தொடர்பான பணத்தைப் பெறுகிறார் என்று கருதினால், ஒரு வருடத்திற்கு அரசாங்கம் செலவழிக்க வேண்டிய தொகை 4800 கோடி ரூபாய் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement