• Apr 27 2024

யாழில் ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சி வழங்க திட்டம்! அரச அதிபர் அறிவிப்பு samugammedia

Chithra / Aug 9th 2023, 8:08 am
image

Advertisement

ஆசிரியர்களுக்குரிய மனித உள்ளார்ந்த வளம் சம்பந்தப்பட்ட பயிற்சி தேவை என தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக குறித்த பயிற்சி வழங்கப்படவுள்ளது என்றார்.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், 

சிறுவர் அபிவிருத்தி எனும் போது பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சி தேவை. நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உளவள பயிற்சி தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும்.

மாகாணப் கல்விப் பணிப்பாளருடன் இது தொடர்பில் கதைத்திருந்தேன். தனியார் நிறுவனம் ஊடாக குறித்த பயிற்சியை வழங்குவதுடன் வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக வழங்குவதுடன் பின்னர் கட்டம் கட்டடமாக பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை அதிபர்கள் குறித்த விடயத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

யாழில் ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சி வழங்க திட்டம் அரச அதிபர் அறிவிப்பு samugammedia ஆசிரியர்களுக்குரிய மனித உள்ளார்ந்த வளம் சம்பந்தப்பட்ட பயிற்சி தேவை என தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக குறித்த பயிற்சி வழங்கப்படவுள்ளது என்றார்.யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட செயலாளர், சிறுவர் அபிவிருத்தி எனும் போது பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களுக்கு உளவள பயிற்சி தேவை. நாளாந்த செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உளவள பயிற்சி தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும்.மாகாணப் கல்விப் பணிப்பாளருடன் இது தொடர்பில் கதைத்திருந்தேன். தனியார் நிறுவனம் ஊடாக குறித்த பயிற்சியை வழங்குவதுடன் வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக வழங்குவதுடன் பின்னர் கட்டம் கட்டடமாக பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.வலயக் கல்விப் பணிப்பாளர் பாடசாலை அதிபர்கள் குறித்த விடயத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

Advertisement

Advertisement