• May 19 2024

இலங்கையில் இந்திய ரூபாய் பயன்படுத்த திட்டம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 6th 2023, 9:31 am
image

Advertisement

இந்திய ரூபாவை இலங்கையுடனான எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வங்கிகள் சுற்றுலாவுக்கான செயல்முறையை செயல்படுத்தும் கணக்குகளைத் தொடங்கிய பின்னர், வர்த்தகம் மற்றும் மூலதன பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்னெடுத்துச் செல்வதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

இந்திய மத்திய வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி 2022 இல் இந்த செயல்முறையை செயல்படுத்திய பின்னர், இலங்கை வங்கி, ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை ஏற்கனவே இந்திய ரூபாயில் வோஸ்ட்ரோ கணக்குகளை ஆரம்பித்துள்ளன.

இந்தநிலையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில், மேற்கொள்ளப்படும் இந்த முன்முயற்சியின் நன்மையான தாக்கம், மற்ற துறைகளுக்கும் அதனை விரிவுப்படுத்த உதவும் என்று இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதேவேளை இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது இந்திய நாணயத்தை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நாணயமாக மாற்ற வேண்டியது அவசியமானது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இந்தியர்கள் இலங்கையில் நேரடியாக தமது பணத்தை பயன்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை எடுத்தால் இலங்கையர்கள் வேறு நாணயத்தை சார்ந்திருக்காமல் செயற்பட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய கடன் தொகை இம்மாதம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் இலங்கையில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 


இலங்கையில் இந்திய ரூபாய் பயன்படுத்த திட்டம் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு SamugamMedia இந்திய ரூபாவை இலங்கையுடனான எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.வங்கிகள் சுற்றுலாவுக்கான செயல்முறையை செயல்படுத்தும் கணக்குகளைத் தொடங்கிய பின்னர், வர்த்தகம் மற்றும் மூலதன பரிவர்த்தனைகளைத் தீர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை முன்னெடுத்துச் செல்வதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.இந்திய மத்திய வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி 2022 இல் இந்த செயல்முறையை செயல்படுத்திய பின்னர், இலங்கை வங்கி, ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா மற்றும் இந்தியன் வங்கி ஆகியவை ஏற்கனவே இந்திய ரூபாயில் வோஸ்ட்ரோ கணக்குகளை ஆரம்பித்துள்ளன.இந்தநிலையில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில், மேற்கொள்ளப்படும் இந்த முன்முயற்சியின் நன்மையான தாக்கம், மற்ற துறைகளுக்கும் அதனை விரிவுப்படுத்த உதவும் என்று இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதேவேளை இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்போது இந்திய நாணயத்தை இலங்கையில் பயன்படுத்தக்கூடிய நாணயமாக மாற்ற வேண்டியது அவசியமானது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.இதன்மூலம் இந்தியர்கள் இலங்கையில் நேரடியாக தமது பணத்தை பயன்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நடவடிக்கை எடுத்தால் இலங்கையர்கள் வேறு நாணயத்தை சார்ந்திருக்காமல் செயற்பட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.அத்துடன், சர்வதேச நாணய நிதியம் வழங்கிய கடன் தொகை இம்மாதம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் இலங்கையில் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement