புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
புதுக்குடியிருப்பு தேவிபுரம் பெரியபிகுளம் பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய கொஸ்தாபிள் பிரதீபனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையில் பொலிஸ் சார்ஜன்களான (60910) ஜெயசிங்க , (70537) குணவர்த்தன, பொலிஸ் கொஸ்தாபல்களான (72485) ஜெயசூரிய, (74996) பணாவர, (88550) பிரதீபன், (89159) விஜரத்ன, பெண் கொஸ்தாபலான (12486) வினோதமலர் ஆகிய குறித்த பொலிஸ் குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
கோடா 1702 லீற்றர் , எரிந்த கோடா 30 லீற்றர், கசிப்பு 58 லீற்றர், பரல் 18, கசிப்பு உற்பத்தியாக்குவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடனும் தேவிபுரம் அ பகுதியினை சேர்ந்த 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், புதுக்குடியிருப்பு தேவிபுரம் பெரியபிகுளம் பகுதியில் சட்ட விரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய கொஸ்தாபிள் பிரதீபனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையில் பொலிஸ் சார்ஜன்களான (60910) ஜெயசிங்க , (70537) குணவர்த்தன, பொலிஸ் கொஸ்தாபல்களான (72485) ஜெயசூரிய, (74996) பணாவர, (88550) பிரதீபன், (89159) விஜரத்ன, பெண் கொஸ்தாபலான (12486) வினோதமலர் ஆகிய குறித்த பொலிஸ் குழுவினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.கோடா 1702 லீற்றர் , எரிந்த கோடா 30 லீற்றர், கசிப்பு 58 லீற்றர், பரல் 18, கசிப்பு உற்பத்தியாக்குவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடனும் தேவிபுரம் அ பகுதியினை சேர்ந்த 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.