• Nov 26 2024

'குவாட்' மாநாடு - மோடி அமெரிக்கா பயணம்!

Tamil nila / Sep 21st 2024, 4:50 pm
image

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று சனிக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து குவாட் (Quad) எனும் இராணுவ கூட்டணியை உருவாக்கியுள்ளது.

வருடந்தோறும் இந்த குவாட் அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் இம் மாநாடு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

இன்று நடைபெறவுள்ள இம் மாநாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமை தாங்குகிறார்.

தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளிலும் மோடி கலந்துகொள்ளவுள்ளதோடு, நாளை மறுதினம் திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையிலும் உரையாற்றவுள்ளார்.

இப் பயணத்தில் பல நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'குவாட்' மாநாடு - மோடி அமெரிக்கா பயணம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று சனிக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார்.இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து குவாட் (Quad) எனும் இராணுவ கூட்டணியை உருவாக்கியுள்ளது.வருடந்தோறும் இந்த குவாட் அமைப்பின் மாநாடு நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இந்த வருடம் இம் மாநாடு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.இன்று நடைபெறவுள்ள இம் மாநாட்டுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமை தாங்குகிறார்.தொடர்ந்து நாளை ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளிலும் மோடி கலந்துகொள்ளவுள்ளதோடு, நாளை மறுதினம் திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் சபையிலும் உரையாற்றவுள்ளார்.இப் பயணத்தில் பல நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement