• May 19 2024

விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினருக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் அதிரடி கைது! SamugamMedia

Chithra / Mar 14th 2023, 1:13 pm
image

Advertisement

தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலையில் வசிக்கும் குறித்த முன்னாள் போராளிக்கு வெள்ளவத்தையில் உள்ள முகவரிக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாடு செல்ல உதவிய குற்றச்சாட்டில் குறித்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த முன்னாள் போராளி வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போதே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேற்படி கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினருக்கு உதவிய பொலிஸ் கான்ஸ்டபிள் அதிரடி கைது SamugamMedia தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொக்கட்டிச்சோலையில் வசிக்கும் குறித்த முன்னாள் போராளிக்கு வெள்ளவத்தையில் உள்ள முகவரிக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாடு செல்ல உதவிய குற்றச்சாட்டில் குறித்த கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த முன்னாள் போராளி வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போதே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேற்படி கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகத்திற்கிடமான பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Advertisement

Advertisement

Advertisement