• Jan 26 2025

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பொலிஸின் விசேட அறிவிப்பு!

Chithra / Jan 16th 2025, 7:31 am
image

  

சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் நேற்று  நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

அதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சட்டத்திற்கு இணங்க பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பொலிஸ் இனிமேல் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டத்திற்கு இணங்காத ஆபத்தான முறையில் பொருத்தப்பட்ட உதிரிபாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழிலை இல்லாதொழிக்க  இலங்கை பொலிஸ் ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று பொலிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பொலிஸின் விசேட அறிவிப்பு   சட்டத்திற்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மேலதிக உதிரிபாகங்களை அகற்றுவதில்லை என பொலிஸ் தீர்மானித்துள்ளது.அகில இலங்கை முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் நேற்று  நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுஅதன்படி, முச்சக்கர வண்டிகளில் மேலதிக உதிரிபாகங்களை பொருத்துவதில் உள்ள சட்ட கட்டமைப்பு மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சட்டத்திற்கு இணங்க பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளின் உதிரிபாகங்கள் அகற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய பொலிஸ் இனிமேல் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், சட்டத்திற்கு இணங்காத ஆபத்தான முறையில் பொருத்தப்பட்ட உதிரிபாகங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.முச்சக்கர வண்டி உதிரிபாக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் தொழிலை இல்லாதொழிக்க  இலங்கை பொலிஸ் ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று பொலிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement