• Nov 22 2024

கொலை மிரட்டல் - நாட்டை விட்டு தப்பியோடிய பொலிஸ் உத்தியோகத்தர்..!

Chithra / Feb 29th 2024, 8:13 am
image

 

பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் மரண அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

துமிந்த ஜயதிலக்க பெப்ரவரி 14 அன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் பிரான்சிற்கு புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரை மிரட்டியதாகக் கூறப்படும் குழுக்களில் கஞ்சிபானி இம்ரான் மற்றும் ஹீனாட்டியான மகேஸ் ஆகியோர் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜயதிலக, குற்றவாளிகளிடமிருந்து தனக்கு வந்ததாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விமானத்தில் இருந்தே ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

எனவே சம்பவங்கள் குறித்து நியாயமான சந்தேகமும் நிலவுவதாக பொலிஸார் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் இரண்டு சந்தேக நபர்களுக்கு விசம் வழங்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த அதிகாரிக்கு எதிரான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாதாள உலகக் குற்றவாளிகளிடமிருந்து தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அந்த அதிகாரி சிரேஸ்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொலை மிரட்டல் - நாட்டை விட்டு தப்பியோடிய பொலிஸ் உத்தியோகத்தர்.  பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் மரண அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் துமிந்த ஜயதிலக்க மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.துமிந்த ஜயதிலக்க பெப்ரவரி 14 அன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் பிரான்சிற்கு புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.அவரை மிரட்டியதாகக் கூறப்படும் குழுக்களில் கஞ்சிபானி இம்ரான் மற்றும் ஹீனாட்டியான மகேஸ் ஆகியோர் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜயதிலக, குற்றவாளிகளிடமிருந்து தனக்கு வந்ததாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து விமானத்தில் இருந்தே ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.எனவே சம்பவங்கள் குறித்து நியாயமான சந்தேகமும் நிலவுவதாக பொலிஸார் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் இரண்டு சந்தேக நபர்களுக்கு விசம் வழங்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த அதிகாரிக்கு எதிரான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் பாதாள உலகக் குற்றவாளிகளிடமிருந்து தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அந்த அதிகாரி சிரேஸ்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement