• Sep 21 2024

உயர் அதிகாரிகளை விமர்சித்த பொலிஸ் சார்ஜண்ட் இடைநிறுத்தம்! samugammedia

Tamil nila / Jun 24th 2023, 8:27 am
image

Advertisement

சமூகவலைத்தளத்தில் காணொளிகளை வெளியிட்டு உயர் அதிகாரிகளை விமர்சித்த பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரே, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் மூன்று காணொளிகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 17, 18, 20 ஆகிய மூன்று நாட்களுக்குள் பொலிஸ் சீருடை அணிந்து, பொலிஸ் உயர்அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தி கொள்ளும் வகையிலும், இலங்கை பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சமூக ஊடகங்களில் காணொளிகளை வெளியிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர் கொழும்பு தெற்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுப்பியுள்ள கடிதத்தின் பிரகாரம் பொலிஸ் சார்ஜன்ட் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், தான் ஒரு மனிதாபிமானம் மிக்க பொலிஸ் உத்தியோகத்தர் என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டே காணொளிகளில் பொலிஸாரை குற்றம் சுமத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பொலிஸ் மா அதிபரின் குறைகேள் அறைக்குச் சென்றபோது, ​​சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசியதற்குக் கோபமடைந்ததாகவும், சிங்களத்தில் பேசுமாறு உத்தரவிட்டதாகவும் இந்த சார்ஜன்ட் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அவரது காணொளியில் அடங்கியிருந்த கருத்துக்கள் பின்வருமாறு,

உயர் பொலிஸ் அதிகாரிகளை மகிழ்விக்கும் வகையில் நடந்து கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படுகின்றது.

பொலிஸ் திணைக்களத்தில் பதவி உயர்வு வழங்குவதற்கு முறையான முறைமை இல்லை.

2008 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பி வரும்போது மடிக்கணினி கொண்டு வருமாறு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

மடிக்கணனி கொண்டுவரவிட்டால் கடமை விடுப்பு விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கூறினார். பின் மடிக்கணினி கொண்டு வருவதாக உறுதியளித்த பின்னரே எனக்கு விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மடிக்கணினி கொண்டு வர முடியாமல் போனதன் காரணமாக, ஒரு வருடத்திற்குள் என்னை 18 காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து அந்த அதிகாரி பழிவாங்கினார்.

பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்து முப்பத்தொரு வருடங்கள் சேவையாற்றியதோடு பொலிஸ் மா அதிபரிடமிருந்து எட்டுப் பாராட்டுப் பத்திரம் அடங்கிய விருதுகளையும் பெற்றுள்ளேன்.

இந்தக் காணொளிகள் வெளியானதன் பின்னர் ஏற்படக்கூடிய எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். என அவர் தனது காணொளிகளில் கருத்து வெளியிட்டிருந்தார்.

குறித்த சார்ஜன்ட் வெளியிட்ட காணொளிகள் , சமூக வலைதளங்களில் வெளியான பின்னர் இந்தக் காணொளிகளை பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்தே பொலிஸ் சார்ஜண்ட் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உயர் அதிகாரிகளை விமர்சித்த பொலிஸ் சார்ஜண்ட் இடைநிறுத்தம் samugammedia சமூகவலைத்தளத்தில் காணொளிகளை வெளியிட்டு உயர் அதிகாரிகளை விமர்சித்த பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரே, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து சமூக ஊடகங்களில் மூன்று காணொளிகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.இந்நிலையில் கடந்த 17, 18, 20 ஆகிய மூன்று நாட்களுக்குள் பொலிஸ் சீருடை அணிந்து, பொலிஸ் உயர்அதிகாரிகள் மீது பொதுமக்கள் அதிருப்தி கொள்ளும் வகையிலும், இலங்கை பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் சமூக ஊடகங்களில் காணொளிகளை வெளியிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர் கொழும்பு தெற்கு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அனுப்பியுள்ள கடிதத்தின் பிரகாரம் பொலிஸ் சார்ஜன்ட் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், தான் ஒரு மனிதாபிமானம் மிக்க பொலிஸ் உத்தியோகத்தர் என்று தன்னைத் தானே அறிமுகப்படுத்திக் கொண்டே காணொளிகளில் பொலிஸாரை குற்றம் சுமத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் பொலிஸ் மா அதிபரின் குறைகேள் அறைக்குச் சென்றபோது, ​​சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருடன் ஆங்கிலத்தில் பேசியதற்குக் கோபமடைந்ததாகவும், சிங்களத்தில் பேசுமாறு உத்தரவிட்டதாகவும் இந்த சார்ஜன்ட் சமூக ஊடகங்களில் வெளியிட்ட காணொளி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளார்.அவரது காணொளியில் அடங்கியிருந்த கருத்துக்கள் பின்வருமாறு,உயர் பொலிஸ் அதிகாரிகளை மகிழ்விக்கும் வகையில் நடந்து கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படுகின்றது.பொலிஸ் திணைக்களத்தில் பதவி உயர்வு வழங்குவதற்கு முறையான முறைமை இல்லை.2008 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பி வரும்போது மடிக்கணினி கொண்டு வருமாறு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .மடிக்கணனி கொண்டுவரவிட்டால் கடமை விடுப்பு விடுமுறைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கூறினார். பின் மடிக்கணினி கொண்டு வருவதாக உறுதியளித்த பின்னரே எனக்கு விடுமுறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.மடிக்கணினி கொண்டு வர முடியாமல் போனதன் காரணமாக, ஒரு வருடத்திற்குள் என்னை 18 காவல் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்து அந்த அதிகாரி பழிவாங்கினார்.பொலிஸ் கான்ஸ்டபிளாக சேவையில் இணைந்து முப்பத்தொரு வருடங்கள் சேவையாற்றியதோடு பொலிஸ் மா அதிபரிடமிருந்து எட்டுப் பாராட்டுப் பத்திரம் அடங்கிய விருதுகளையும் பெற்றுள்ளேன்.இந்தக் காணொளிகள் வெளியானதன் பின்னர் ஏற்படக்கூடிய எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றேன். என அவர் தனது காணொளிகளில் கருத்து வெளியிட்டிருந்தார்.குறித்த சார்ஜன்ட் வெளியிட்ட காணொளிகள் , சமூக வலைதளங்களில் வெளியான பின்னர் இந்தக் காணொளிகளை பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பார்த்துள்ளனர்.பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்தே பொலிஸ் சார்ஜண்ட் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதற்கமைய இந்த பொலிஸ் சார்ஜன்ட் தொடர்பில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement