• May 06 2025

போராட்டத்துக்கு சென்ற பொதுமக்களை மிரட்டி திருப்பி அனுப்பிய பொலிசார்..!

Chithra / Feb 4th 2024, 12:59 pm
image


  

மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் மட்டக்களப்பு – கல்லடியில் இன்றைய தினம் (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருகோணமலையிலிருந்து சென்றவர்களை பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்படையினரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸொன்றில் சென்றவர்களை வெருகல் பாலத்திலுள்ள பொலிஸ் சேதனைச்சாவடியில் வழிமறித்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்படையினர் அவர்களிடம் பஸ் டிக்கட்டுக்களை கேட்டதாகவும் பின்னர் அவர்கள் அனைவரையும் பஸ்ஸில் இருந்து இறக்கி விசாரணைக்கு உட்படுத்தியதுடன், பஸ்ஸையும் சோதனைக்கு உட்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டத்திற்காக கொண்டு சென்ற பதாகைகளும் ஏனைய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாரால் அனைவருடைய விபரங்களும் பெறப்பட்டுள்ளதோடு  மற்றும் பஸ்ஸின் சாரதி, நடத்துனரின் ஆவணங்களையும் பொலிஸாரால் பறித்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திரும்பிச்செல்லாவிட்டால் வழக்கு தாக்கல் செய்வதாகவும் குறிப்பிட்டதோடு புகைப்படங்களை எடுத்தவர்களுடைய கைத் தொலைபேசியை வாங்கி அனைத்தையும் அழித்துவிட்டு மீண்டும் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர் குறித்த பஸ் மீண்டும் திருகோணமலைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் 53 பேர் குறித்த பஸ்ஸில் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதில் 43 பெண்களும் 10 ஆண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

போராட்டத்துக்கு சென்ற பொதுமக்களை மிரட்டி திருப்பி அனுப்பிய பொலிசார்.   மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தினரால் மட்டக்களப்பு – கல்லடியில் இன்றைய தினம் (04) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருகோணமலையிலிருந்து சென்றவர்களை பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்படையினரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.பஸ்ஸொன்றில் சென்றவர்களை வெருகல் பாலத்திலுள்ள பொலிஸ் சேதனைச்சாவடியில் வழிமறித்த பொலிஸார் மற்றும் பாதுகாப்புப்படையினர் அவர்களிடம் பஸ் டிக்கட்டுக்களை கேட்டதாகவும் பின்னர் அவர்கள் அனைவரையும் பஸ்ஸில் இருந்து இறக்கி விசாரணைக்கு உட்படுத்தியதுடன், பஸ்ஸையும் சோதனைக்கு உட்படுத்தியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது ஆர்ப்பாட்டத்திற்காக கொண்டு சென்ற பதாகைகளும் ஏனைய பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.மேலும், பொலிஸாரால் அனைவருடைய விபரங்களும் பெறப்பட்டுள்ளதோடு  மற்றும் பஸ்ஸின் சாரதி, நடத்துனரின் ஆவணங்களையும் பொலிஸாரால் பறித்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.திரும்பிச்செல்லாவிட்டால் வழக்கு தாக்கல் செய்வதாகவும் குறிப்பிட்டதோடு புகைப்படங்களை எடுத்தவர்களுடைய கைத் தொலைபேசியை வாங்கி அனைத்தையும் அழித்துவிட்டு மீண்டும் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர் குறித்த பஸ் மீண்டும் திருகோணமலைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் 53 பேர் குறித்த பஸ்ஸில் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதில் 43 பெண்களும் 10 ஆண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now