ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளைஆரம்பிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.
புதிய அரசியல் கூட்டணிகளை இணைத்துக்கொண்டு இந்த தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
அடுத்த வருடம் தேர்தல் வருடமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளதால், எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
அதேவளை நிமல் லன்சா மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் மாவட்ட தலைவர்கள் தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்க உள்ளனர்.
இதனை தவிர தேசிய மக்கள் சக்தியும் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளது. அந்த கட்சி ஏற்கனவே மாவட்டம் தோறும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதிலும் இந்தப் பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானத்துள்ள அரசியல் கட்சிகள். ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல எதிர்க்கட்சிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளைஆரம்பிக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.புதிய அரசியல் கூட்டணிகளை இணைத்துக்கொண்டு இந்த தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.அடுத்த வருடம் தேர்தல் வருடமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளதால், எதிர்க்கட்சிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.அதேவளை நிமல் லன்சா மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் மாவட்ட தலைவர்கள் தலைமையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தேர்தல் பிரசாரங்களை ஆரம்பிக்க உள்ளனர்.இதனை தவிர தேசிய மக்கள் சக்தியும் தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளது. அந்த கட்சி ஏற்கனவே மாவட்டம் தோறும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.மேலும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரப் பணிகளை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது.நாடு முழுவதிலும் இந்தப் பிரச்சாரப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.