• Apr 27 2025

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று; 170 வெளிநாட்டு பிரமுகர்கள் பங்கேற்பு

Chithra / Apr 26th 2025, 9:32 am
image

 

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று (26) நடைபெறுகிறது. 

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக நேற்றையதினம் இரவு மூடப்பட்டது. 

இறுதி நல்லடக்க ஆராதனையில் 200,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே 128,000 க்கும் அதிகமானோர் புனித பேதுரு பேராலய சதுக்கத்திற்குள் பிரவேசித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க நிகழ்வில் 170 வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் மறைவையொட்டி நேற்று (25) முதல் வத்திக்கானில் 9 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகிறது.


பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று; 170 வெளிநாட்டு பிரமுகர்கள் பங்கேற்பு  பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க ஆராதனை இன்று (26) நடைபெறுகிறது. பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக நேற்றையதினம் இரவு மூடப்பட்டது. இறுதி நல்லடக்க ஆராதனையில் 200,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 128,000 க்கும் அதிகமானோர் புனித பேதுரு பேராலய சதுக்கத்திற்குள் பிரவேசித்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் இறுதி நல்லடக்க நிகழ்வில் 170 வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.பரிசுத்த திருத்தந்தை பிரான்சிஸின் மறைவையொட்டி நேற்று (25) முதல் வத்திக்கானில் 9 நாட்கள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement