• Apr 28 2025

அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு!

Chithra / Mar 27th 2025, 2:25 pm
image

 

எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23, 24, 28, 29  ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.  

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே மாதம் ஆறாம் திகதி நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

குறித்த மூன்று பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பு மனு கையளிப்பு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

அஞ்சல் மூல வாக்களிப்பிற்கான திகதிகள் அறிவிப்பு  எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு ஏப்ரல் மாதம் 22, 23, 24, 28, 29  ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்கள் ஏப்ரல் மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே மாதம் ஆறாம் திகதி நடத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த மூன்று பிரதேச சபை தேர்தலுக்கான வேட்பு மனு கையளிப்பு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now