உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பானது இன்றையதினம் சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.
தபால் மூலம் வாக்களிப்பதற்காக 24,25,28,29 ஆகிய தினங்களை தேர்தல் ஆணைக்குழு ஒதுக்கியுள்ளது.
அந்தவகையில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணதிலகவின் கீழ் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.
வவுனியா
வவுனியா மாவட்டத்திலும் வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது தபால்வாக்குகளை அளித்திருந்தனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 5550 பேரும், முல்லைத்தீவில் 3807 பேரும் மன்னாரில் 3792 பேரும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 13149 பேரும் வாக்களிக்கின்றனர். தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை
திருகோணமலை தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகத்திலுள்ள ஆசிரியர்களின் தபால் மூல வாக்களிப்பு இன்றையதினம்(24) தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் தோப்பூர் கோட்டக்கல்வி அலுவலக பிரிவிலுள்ள ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்ததையும் எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.
நுவரெலியா
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் அதிகாரிகள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் இன்றையதினமும் நாளையதினமும் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
அந்தவகையில், மலையகத்தில் இன்றையதினம் காலை வேளையிலேயே பொலிஸார் வாக்களிக்க ஆரம்பித்தனர்.
இன்றையதினம் காலை ஆரம்பித்த வாக்களிப்பில் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் அதிகாரிகள் சென்று வாக்களித்து வருகின்றனர்.
இதுவரையில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் வாக்களித்து வருகின்றனர்.
கிண்ணியா
கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகிய இரு உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தபால் மூலமான வாக்களிப்பு இன்று(24) காலை ஆரம்பமானது.
கிண்ணியா வலய கல்வி அலுவலகம், கிண்ணியா பிரதேச செயலகம் ஆகியவற்றில், காலை 08.30 மணிக்கு, சுமூகமான முறையில் வாக்களிப்பு ஆரம்பமானது.
கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் 243 ஊழியர்களும், கிண்ணியா பிரதேச செயலகத்தில் 176 ஊழியர்களும் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருந்தனர்.
அரச ஊழியர்கள், ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.
கிண்ணியா நகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக 9 அரசியல் கட்சிகளும், பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக 11 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
கிண்ணியா நகரசபையில் தேர்தல் மூலம் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 27630 பேரும், கிண்ணியா பிரதேச சபையில் தேர்தல் மூலம் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 25154 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து மொத்தமாக136 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இதற்காக 319,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திருகோணமலை மாநகர மற்றும் கிண்ணியா நகர சபை உட்பட, மூதூர், குச்சவெளி, கிண்ணியா, தம்பலகாமம் , திருகோணமலை பட்டணமும் சூழலும், கந்தளாய் , சேருவில, மொறவெவ, வெருகல், பதவிசிறிபுர, கோமராங்கடவெல ஆகிய பிரதேசிய சபைகளுமாக மொத்தம் 13 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தம்பலகாமம்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தம்பலகாமத்திலும் இடம்பெற்று வருகின்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த தபால் மூல வாக்களிப்பில், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
அமைதியான முறையில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைதியான முறையில் இடம்பெறும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கானஅஞ்சல் மூல வாக்களிப்பு. உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பானது இன்றையதினம் சுமூகமான முறையில் இடம்பெற்று வருகின்றது.தபால் மூலம் வாக்களிப்பதற்காக 24,25,28,29 ஆகிய தினங்களை தேர்தல் ஆணைக்குழு ஒதுக்கியுள்ளது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணதிலகவின் கீழ் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.வவுனியாவவுனியா மாவட்டத்திலும் வாக்களிப்பு செயற்பாடுகள் சுமூகமாக ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது தபால்வாக்குகளை அளித்திருந்தனர்.இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 5550 பேரும், முல்லைத்தீவில் 3807 பேரும் மன்னாரில் 3792 பேரும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் 13149 பேரும் வாக்களிக்கின்றனர். தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.திருகோணமலைதிருகோணமலை தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகத்திலுள்ள ஆசிரியர்களின் தபால் மூல வாக்களிப்பு இன்றையதினம்(24) தோப்பூர் கோட்டக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றது.இதில் தோப்பூர் கோட்டக்கல்வி அலுவலக பிரிவிலுள்ள ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்ததையும் எம்மால் அவதானிக்க கூடியதாக இருந்தது.நுவரெலியா2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் அதிகாரிகள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் இன்றையதினமும் நாளையதினமும் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.அந்தவகையில், மலையகத்தில் இன்றையதினம் காலை வேளையிலேயே பொலிஸார் வாக்களிக்க ஆரம்பித்தனர்.இன்றையதினம் காலை ஆரம்பித்த வாக்களிப்பில் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் அதிகாரிகள் சென்று வாக்களித்து வருகின்றனர்.இதுவரையில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.கிளிநொச்சி கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் வாக்களித்து வருகின்றனர்.கிண்ணியாகிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகிய இரு உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தபால் மூலமான வாக்களிப்பு இன்று(24) காலை ஆரம்பமானது.கிண்ணியா வலய கல்வி அலுவலகம், கிண்ணியா பிரதேச செயலகம் ஆகியவற்றில், காலை 08.30 மணிக்கு, சுமூகமான முறையில் வாக்களிப்பு ஆரம்பமானது. கிண்ணியா வலய கல்வி அலுவலகத்தில் 243 ஊழியர்களும், கிண்ணியா பிரதேச செயலகத்தில் 176 ஊழியர்களும் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருந்தனர்.அரச ஊழியர்கள், ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.கிண்ணியா நகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக 9 அரசியல் கட்சிகளும், பிரதேச சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக 11 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன.கிண்ணியா நகரசபையில் தேர்தல் மூலம் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 27630 பேரும், கிண்ணியா பிரதேச சபையில் தேர்தல் மூலம் 8 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 25154 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து மொத்தமாக136 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இதற்காக 319,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.திருகோணமலை மாநகர மற்றும் கிண்ணியா நகர சபை உட்பட, மூதூர், குச்சவெளி, கிண்ணியா, தம்பலகாமம் , திருகோணமலை பட்டணமும் சூழலும், கந்தளாய் , சேருவில, மொறவெவ, வெருகல், பதவிசிறிபுர, கோமராங்கடவெல ஆகிய பிரதேசிய சபைகளுமாக மொத்தம் 13 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தம்பலகாமம்நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தம்பலகாமத்திலும் இடம்பெற்று வருகின்றது.தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம்பெற்ற குறித்த தபால் மூல வாக்களிப்பில், உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர். அமைதியான முறையில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.